Actress Tamannah: தமன்னாவுக்கு தமிழில் பட வாய்ப்புகள் குறையவே பாலிவுட் பக்கம் சென்று விட்டார். பொதுவாக இந்தி படங்களில் கவர்ச்சி என்பது சற்று தூக்கலாக தான் இருக்கும். ஆனால் ஒரு காலகட்டத்தில் தமன்னா முத்தக் காட்சியில் நடிக்கவே மறுப்பு தெரிவித்ததால் இதில் விதிவிலக்காக இருப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால் நான் அப்படி இல்லை என்று சொல்லும் அளவுக்கு, பாலிவுட் நடிகைகளை தோற்றுப் போகும் படியான கவர்ச்சி காட்சியில் நடித்திருக்கிறார் தமன்னா. இப்படி படுமோசமாக நடிக்க காரணம் அவருடைய காதலன் என்பதாலா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாக சினிமாவில் மில்க் பியூட்டி தமன்னா நடித்து வருகிறார்.
ஆனால் கொஞ்சமும் தனது அழகு மங்காமல் காத்து வருகிறார். தனக்கான ஒருவன் வருவான் என காத்துக் கொண்டிருந்த நிலையில் விஜய் வர்மாவுடன் லஸ்ட் ஸ்டோரீஸ் 2 என்ற படத்தில் நடித்திருக்கிறார். இதில் விஜய் வர்மாவுடன் அந்தரங்க காட்சி, முத்த காட்சி என எதுவும் மிச்சம் வைக்காமல் நடித்திருக்கிறார் தமன்னா.
ஆரம்பத்தில் விஜய் வர்மாவுடன் தமன்னா டேட்டிங் செய்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டது. இதற்கு மறுப்பு தெரிவித்து வந்த தமன்னா சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட போது விஜய் வர்மாவை காதலிக்கிறேன் என உறுதிப்படுத்தினார். இப்போது லிஸ்ட் ஸ்டோரீஸ் 2 படத்தின் காட்சியை பார்க்கும் போது ரசிகர்களுக்கு குழப்பம் ஏற்பட்டு இருக்கிறது.
அதாவது இதுபோன்ற அந்தரங்க காட்சியில் நடித்ததால் தான் விஜய் வர்மா மீது தமன்னாவுக்கு காதல் ஏற்பட்டதா அல்லது அவர் மீது உள்ள காதலினால் இந்த காட்சியில் நடிக்க சம்மதித்தாரா என கேள்வி எழுப்பி வருகிறார்கள். இதில் இவ்வளவு தாராளம் காட்டிய நிலையில் இன்று அவருடைய நடிப்பில் ஜி கர்தா என்ற வெப் தொடர் வெளியாகி இருக்கிறது.
இதில் கண்ணை கூசும் அளவிற்கு மோசமான காட்சியில் தமன்னா நடித்திருக்கிறார். மேலும் தொடர்ந்து ரசிகர்களின் கேள்வியால் திக்குமுக்காடிய தமன்னா வேறு வழியில்லாமல் விஜய் வர்மாவை காதலிக்கிறேன் என்று ஒத்துக் கொண்டுள்ளார். அது மட்டும் இன்றி இதற்கு மேலும் சிங்கிளாகவே சுத்த வேண்டாம் என மிங்கிளாகி இருக்கிறார்.