நடிக்கும்போதே இந்த படம் பிளாப்னு தெரியும்.. தமன்னா ஓபன் டாக்

Tamannah : மில்க் பியூட்டி என்று அழைக்கப்படும் தமன்னா இப்போது பாலிவுட் வரை ஒரு காட்டு காட்டி வருகிறார். ஆரம்பத்தில் புடவை, சுடிதாரில் நடித்து வந்த இவர் இப்போது படு கிளாமர் காட்டி பட்டையை கிளப்புகிறார்.

அதுவும் ஜெயிலர் படத்தில் கவாலயா பாடலில் குத்தாட்டம் போட்டு ரசிகர்களை கிரங்கடித்து உள்ளார். இப்போது அவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் பல மொழிகளிலும் வரும் நிலையில் ஆச்சரியம் தரும் ஒரு விஷயம் கூறியிருக்கிறார்.

அதாவது தன் நடிக்கும் போதே இந்த படம் பிளாப் ஆகும் என்று தெரியும் என கூறினார். அதாவது விஜய்யின் ஐம்பதாவது படம் என்று மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான படம் தான் சுறா. இந்த படத்தில் கதாநாயகியாக தமன்னா நடித்திருந்தார்.

தோல்வி படம்னு தெரிஞ்சே நடித்த தமன்னா

ஆனால் படம் எதிர்பார்த்த அளவு போகாமல் ட்ரோல் கன்டென்ட் ஆக மாறியது. இதுகுறித்து தமன்னா பேசும்போது படத்தில் நடிக்கும் போதே இந்த படம் ஓடாது என்று எனக்கு நன்றாக தெரிந்துவிட்டது. அந்த படத்தில் என்னுடைய கதாபாத்திரமும் பெரிய அளவில் இல்லை.

எனக்கு காமெடி கதாபாத்திரம் போல தான் கொடுத்திருந்தனர் என்ற பல வருடம் கழித்து இப்போது தமன்னா பேட்டியில் இதை குறிப்பிட்டு இருக்கிறார். மேலும் இப்போது தமன்னா பட வாய்ப்பைக் காட்டிலும் வெப் தொடர்களில் அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார்.

ஏனென்றால் படங்களில் சென்சார் காட்சிகளில் தடை போடப்படுகிறது. ஆனால் வெப் தொடர்களில் சென்சார் பிரச்சனை இல்லை என்பதால் தாராள கவர்ச்சி காட்டி நடித்து வருகிறார். இதனால் அவரது ரசிகர் எண்ணிக்கையும் தற்போது அதிகரித்துள்ளது.

Leave a Comment