அடுத்த விஜய் சேதுபதி போல் வளர்ந்து வரும் தமிழ் நடிகர்.. அலட்டாத இயல்பான நடிப்பு!

இயல்பாய் நடிக்கக் கூடிய திறமை உள்ள நடிகர்கள் தமிழ் சினிமாவில் மிக மிக குறைவு. அந்தவகையில் விஜய்சேதுபதியின் இயல்பான நடிப்பு தனித்துவமானது. இவரைப் போன்றே இப்போது ஒரு நடிகர் வளர்ந்து வருகிறார்.

ஒவ்வொரு படத்திலும் வித்தியாசம், இயல்பான நடிப்பு என சொல்ல வைக்கிறார். அவர் வேறு யாரும் இல்லை அருள்நிதி. சமீபத்தில் இவரை திரையில் பார்க்க அனைவரும் விரும்பி வருகின்றன. ஆரம்பத்திலிருந்தே கதைகளை ரொம்ப நேர்த்தியாகவே தேர்வு செய்து நடிப்பவர் நடிகர் அருள்நிதி.

மேலும் அருள்நிதி எத்தனை வருடம் ஆனாலும் மசாலா இல்லாமல் எல்லாமே தரமான கதைகளை கொடுக்க வேண்டும் என நினைப்பார். அதனால்தான் ரசிகர்களின் மனதில் இவருக்கென்று தனி இடம் இருப்பதால், இன்றுவரை இவர் தமிழ்த் திரையுலகில் இருந்து மறையாமல் இருக்கிறார்.

இந்த வருடம் இவருடைய நடிப்பில் ஜூலை மாதம் வெளியான D ப்ளாக், தேஜாவு, அதைத்தொடர்ந்து ஆகஸ்ட் 26 ஆம் தேதி ரிலீஸ் ஆன டைரி போன்ற படங்கள் அனைத்தும் மக்கள் விரும்பும் சஸ்பென்ஸ், திரில்லர் படமாக இருந்தது.

அத்துடன் அருள்நிதி நடிக்கும் ஒவ்வொரு படங்களிலும் அவருடைய தத்ரூபமான இயல்பான நடிப்பு வெளிவருகிறது. இருந்தாலும் இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் வசூலை வாரி குவிக்கா விட்டாலும், ரசிகர்கள் எதிர்பார்க்கும் சஸ்பென்ஸ் திரில்லர் போன்றவை இருப்பதால் இவரது படங்கள் அண்டர் பிளாக் ஆகாமல் அவரேஜ் ஹிட் ஆகிறது.

ஆகையால் கொஞ்சம்கூட அலட்டல் இல்லாத இயல்பான நடிப்பை தன்னுடைய ஒவ்வொரு படங்களிலும் அருள்நிதி காட்டுவதால் ரசிகர்களின் பார்வையில் அவரும் விஜய் சேதுபதி போல் ஆல்-ரவுண்டராக தமிழ் சினிமாவில் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வருவதாக தெரிகிறது.