ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட நரப்பா வெங்கடேஷ்.. எதற்காக தெரியுமா?

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த அசுரன் மாபெரும் வெற்றி பெற்றதோடு, தேசிய விருது உட்பட பல்வேறு விருதுகளை பெற்றது. இந்நிலையில் இப்படத்தை தெலுங்கில் நாரப்பா என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளனர்.

தெலுங்கில் முன்னணி நடிகரான வெங்கடேஷ், பிரியாமணி உள்ளிட்டோர் நடிக்க, இயக்குநர் ஸ்ரீகாந்த் அடாலா இயக்கி உள்ளார். சமீபத்தில் இப்படத்தின் ட்ரெய்லர் காட்சிகள் வெளியானது. அசுரன் படத்தை எந்தவித மாற்றமும் செய்யாமல் சீன் பை சீன் அப்படியே எடுத்தது போல் இருந்தது.

இதற்கு அசுரன் படத்தையே டப் செய்து வெளியிட்டிருக்கலாம் என ரசிகர்கள் விமர்சனங்களை முன்வைத்தனர். இந்தநிலையில் சமீபத்தில் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய நடிகர் வெங்கடேஷ் தனது ரசிகர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.

படத்தை திரையரங்கில் வெளியிட முடியாமல் போனதற்கு மன்னிப்பு கேட்பதாக வெங்கடேஷ் கூறினார். மேலும், தொடர்ந்து பேசிய வெங்கடேஷ், “இந்த முடிவால், ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றமடைவார்கள். அவர்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்.

தியேட்டர் வெளியீடாக இல்லாமல், தயாரிப்பாளர்கள் டிஜிட்டல் வெளியீட்டை நோக்கி தள்ளப்பட்டதற்கான காரணத்தை ரசிகர்கள் புரிந்துகொள்வார்கள் என நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.

asuran remake narappa