தலைவர் 172 பட டைட்டில் ரெடி.. அடுத்த 1000 கோடி வசூல், ரஜினிக்கு கிரீன் சிக்னல் கொடுத்த மாறன்

Rajini in Thalaivar 172: ரஜினி என்று சொல்வது வெறும் பெயர் அல்ல உலக சினிமாவின் உச்ச நட்சத்திரம். பெயரைக் கேட்டாலே சும்மா அதிருதில்ல என்பதற்கேற்ப 73 வயதிலும் இளம் ஹீரோவுக்கு டஃப் கொடுக்கும் அளவிற்கு மாசாக நடித்துக் கொண்டு வருகிறார்.

கடந்த ஆண்டு வெளிவந்த ஜெயிலர் படம் கிட்டத்தட்ட 650 கோடி வசூலை பெற்று எந்த ஹீரோவும் இவர்கிட்ட நெருங்கவே முடியாத அளவிற்கு ஆட்டநாயகனாக ஜெயித்துக் காட்டியிருக்கிறார். அதேபோல இந்த ஆண்டும் ஒரு சம்பவத்தை செய்ய தயாராகி விட்டார்.

அந்த வகையில் டிஜே ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முக்கால்வாசி முடிந்த நிலையில் அனைத்து திரையரங்களிலும் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியிட இருக்கிறார்கள். இதனை அடுத்து லோகேஷ் இயக்கத்தில் தலைவர் 171 படத்தில் கமிட் ஆகி இருக்கிறார்.

1000 கோடி வசூலுக்கு அஸ்திவாரம் போட்ட கலாநிதி மாறன்

இதற்கான படப்பிடிப்பும் ஒவ்வொன்றாக நடைபெற்று வரும் நேரத்தில் தலைவர் 172 படத்திற்கான அஸ்திவாரத்தையும் போட்டு விட்டார். அதாவது நெல்சனை வைத்து ஜெயிலர் படத்தின் தொடர்ச்சியாக இரண்டாம் பாகத்தில் நடிப்பதற்கு தயாராகி விட்டார். இதற்கான கதைகள் அனைத்தையும் நெல்சன் ரெடி பண்ணிவிட்டார்.

மேலும் இப்படத்தை தயாரிப்பதற்கு சன் பிக்சர்ஸ் நிறுவனமும் கிரீன் சிக்னல் கொடுத்து விட்டது. அந்த வகையில் ஜெயிலர் படத்திற்கு போடப்பட்ட பழைய ஆபீசை மறுபடியும் நெல்சன் இடம் கொடுத்து இருக்கிறார். அங்கே இருந்து தான் தற்போது அனைத்து வேலைகளும் நடைபெற்று வருகிறது.

அதற்கான முதற்கட்டமாக தற்போது தலைவர் 172 படத்திற்கான டைட்டிலை நெல்சன் ரெடி பண்ணிவிட்டார். அது என்ன டைட்டில் என்றால் “குக்கும்”. ஜெயிலர் படத்தில் டைகர் குக்கும் என்ற டயலாக் மிகவும் ஃபேமஸ் ஆகிவிட்டது. அதனால் இதையே டைட்டிலாக வைத்து விடலாமா என்று நெல்சன், ரஜினி மற்றும் கலாநிதி இடம் கேட்டிருக்கிறார்.

ஆனால் அவர்கள் இருவரும் இந்த டைட்டிலை ஓகே சொல்வார்களா அல்லது வேற ஒரு டைட்டிலை வைக்க போகிறார்களா என்பது தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் உறுதியாக நெல்சன் கூறியிருக்கிறார்.

அதாவது எப்படி ஜெயிலர் முதல் பாகம் எதிர்பார்க்காத அளவிற்கு வசூலை குவித்ததோ, அதே மாதிரி தலைவர் 172 படமும் 1000 கோடி வசூலை அள்ளும் என்று கலாநிதி மாறன் இடம் நெல்சன் வாக்குறுதி கொடுத்திருக்கிறார்.

இனி இதற்கான வேலைகள் தான் நெல்சன் முழுமூச்சுடன் இறங்கி செய்யப் போகிறார். இப்படி தொடர்ந்து ரஜினி அடுத்தடுத்த பட வாய்ப்புகளை கையில் வைத்துக்கொண்டு சூப்பர் ஸ்டார் ஆக சுற்றி வருகிறார்.