தளபதி விஜய் மற்றும் அஜித் இருவருக்கும் தமிழ் சினிமாவில் சமமான ரசிகர் கூட்டம் உள்ளது. இந்த இரு நடிகர்களின் படங்கள் தனித்தனியாக வெளியானாலே திரையரங்குகளில் ஆரவாரத்திற்கு பஞ்சம் இருக்காது. இப்போது வருகின்ற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாரிசு மற்றும் துணிவு படம் ஒரே நாளில் வெளியாக உள்ளது.
இதனால் இந்த இரு நடிகர்களுக்கு இடையே கடுமையான போட்டி நிலவும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்நிலையில் விஜய் மற்றும் அஜித் இருவருமே தனது அடுத்த படத்தை புக் செய்து வைத்துள்ளார்கள். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லலித் தயாரிப்பில் தளபதி 67 படத்தில் விஜய் நடிக்க உள்ளார்.
அதேபோல் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் ஏகே 62 படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்நிலையில் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே இந்த இரு படங்களின் டிஜிட்டல் உரிமைகளை நெட் பிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதில் பெரும் வியப்பாக பார்க்கப்படுவது அஜித் படத்தை காட்டிலும் இரண்டு மடங்கு அதிகமாக விஜய் படம் வியாபாரம் ஆகியுள்ளது.
அதாவது அஜித்தின் ஏகே 62 படம் இரட்டை இலக்கு எண்ணாக 65 கோடிக்கு வியாபாரம் ஆகி உள்ளது. அதுவே விஜயின் தளபதி 67 படம் 160 கோடி வியாபாரம் செய்துள்ளது. இரு பெரும் நடிகர்களாக இருந்தாலும் இப்போது விஜய்க்கு தான் அதிக மவுசு உள்ளது என்பது இதன் மூலம் தெரிய வந்துள்ளது.
மேலும் தமிழ்நாட்டில் மட்டுமல்ல வெளிநாட்டிலும் விஜய்க்கு ரசிகர்கள் கூட்டம் அதிகம். ஆனால் அஜித்தை பொறுத்தவரையில் தமிழ் சினிமாவில் மட்டும் தான் அவருக்கு ரசிகர்கள் ஏராளம். மேலும் உதயநிதி துணிவு படத்தை தமிழ்நாட்டில் வெளியிட உள்ளார்.
இந்நிலையில் வாரிசு படத்தையும் உதயநிதி சென்னை மற்றும் செங்கல்பட்டு போன்ற இடங்களில் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் மற்ற இடங்களில் வாரிசு படத்தை லலித்குமார் வெளியிட உள்ளார். இன்னும் ரிலீசுக்கு ஒன்றரை மாதங்களே உள்ள நிலையில் பிரமோஷன் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கலாம்.