தளபதி 67-ல் வில்லனாக களமிறங்கும் 2 இயக்குனர்கள்.. அதிகாரப்பூர்வமான தகவலை வெளியிட்ட லோகேஷ்

விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் வாரிசு திரைப்படம் வரும் பொங்கலுக்கு திரையரங்கை அலங்கரிக்க இருக்கிறது. அதே நாளில் துணிவு திரைப்படமும் வெளியாக இருப்பதால் தற்போது கோலிவுட்டின் பரபரப்பு செய்தியே இந்த இரண்டு படங்கள்தான். இதை அடுத்து தளபதி 67 திரைப்படமும் மிகப் பெரும் ஆவலையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

விக்ரம் திரைப்படத்திற்கு பிறகு மாஸ் இயக்குனராக உருவெடுத்துள்ள லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக விஜய்யை வைத்து இயக்க இருக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் பூஜை போடப்பட்டு ஜனவரி மாதத்தில் இப்படத்தின் சூட்டிங் ஆரம்பிக்கப்பட இருக்கிறது. தற்போது வாரிசு திரைப்படத்திற்கு இருக்கும் எதிர்பார்ப்பை விட இந்த படத்திற்கான பரபரப்பு தான் அதிகமாக இருக்கிறது.

அந்த வகையில் வரும் பொங்கல் அன்று தளபதி 67 படத்தின் அறிவிப்பு ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகும் என கூறப்படுகிறது. இதனால் விஜய் ரசிகர்கள் பெரும் ஆவலோடு அந்த அப்டேட்டுக்காக காத்திருக்கின்றனர். இந்நிலையில் தளபதி 67 திரைப்படத்தில் இரண்டு இயக்குனர்கள் வில்லனாக களம் இறங்கியுள்ளனர்.

ஏற்கனவே இந்த படத்தில் சஞ்சய் தத் முக்கிய வில்லனாக நடிக்க இருப்பது அனைவருக்கும் தெரியும். அதை தொடர்ந்து இப்போது கெளதம் மேனன் உரியடி விஜயகுமார் ஆகிய இருவரும் இப்படத்தில் இணைந்துள்ளனர். பிரபல இயக்குனராக இருக்கும் கௌதம் மேனன் இப்போது நடிப்பில் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகிறார்.

அந்த வகையில் அவர் இப்போது விஜய்க்கு வில்லனாக நடிக்க இருக்கிறார். இந்த தகவலை லோகேஷ் ஒரு பேட்டியின் போது வெளிப்படையாக தெரிவித்துள்ளார். அதேபோன்று உறியடி திரைப்படத்தின் மூலம் பிரபலமான விஜயகுமார் இப்படத்தில் மற்றொரு வில்லனாக நடிக்கிறார். இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முக திறமை கொண்ட இவர் தளபதி 67 திரைப்படத்தில் இணைந்திருப்பது ஆர்வத்தை தூண்டியுள்ளது.

ஏற்கனவே இப்படத்தில் மன்சூர் அலிகான் நடிக்கிறார் என செய்திகள் வெளிவந்தது. தற்போது அதை தொடர்ந்து லோகேஷ் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு சோசியல் மீடியாவை கலக்கி வருகிறது. அது மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தில் நாம் எதிர்பார்க்காத இன்னும் சில முக்கிய பிரபலங்களும் இணைய இருக்கிறார்கள். அது குறித்த அறிவிப்பை வாரிசு திரைப்படத்தின் ரிலீசுக்கு பிறகு லோகேஷ் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருக்கிறார்.