தளபதி-68 பூஜையே போடல ஆன பல கோடிக்கு வியாபாரமான ஆடியோ ரைட்ஸ்.. அனிருத் சம்பவத்தால் உருட்ட போகும் யுவன்

Thalapathy 68: லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடித்து முடித்துள்ள லியோ திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்குகளில் ஆரவாரத்துடன் வெளி வருவதற்கு தயாராகி இருக்கிறது. இப்படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் அனைத்து ரசிகர்களும் வைத்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். அத்துடன் லியோ திரைப்படம் LCU வாக இருக்கலாம் என்று சுவாரஸ்யமான பல ட்விஸ்ட்கள் இருக்கும் என நம்புகிறார்கள்.

அதனால் லியோ திரைப்படம் மிகப் பிரமாண்டமான வெற்றியை கொடுத்து ரசிகர்கள் ஆர்ப்பாட்டமாக கொண்டாடும் அளவிற்கு இருக்கப் போகிறது. இதனை தொடர்ந்து இவருடைய அடுத்த படமான தளபதி 68 படத்தை வெங்கட் பிரபு இயக்கப் போகிறார். மேலும் இப்படத்தில் பல சுவாரஸ்யமான விஷயங்கள் காத்துக் கொண்டிருக்கிறது என்று மறைமுகமாக கங்கை அமரன் கூறி இருக்கிறார்.

அதனால் பலரும் இப்படத்தில் கேமியோ தோற்றத்தில் முக்கியமான நடிகர்கள் நடிக்கப் போகிறார்கள் என்று எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள். மேலும் தற்போது ட்ரெண்டிங்கில் அனைத்து டாப் நடிகர்களின் படங்களை கைவசம் வைத்திருக்கும் ராக்ஸ்டார் அனிருத் இப்படத்தில் கமிட்டாகவில்லை.

இவருக்கு பதிலாக யுவன் சங்கர் ராஜா இசையமைக்க போகிறார். இந்த அறிவிப்பை கேட்டதும் பலரும் அவர்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அதாவது அனிருத் இசை அமைத்தால் அந்த படம் கண்டிப்பாக வெற்றி அடையும். அதே நேரத்தில் ட்ரெண்டிங்கில் இருப்பதும் அனிருத் தான். அப்படி இருக்கும் பொழுது யுவன் கமிட்டாய் இருப்பது பலருக்கும் கேள்வியை எழுப்புகிறது.

அதே நேரத்தில் வெங்கட் பிரபு படம் என்றால் கண்டிப்பாக யுவன் இருப்பார் என்பது அனைவருக்கும் தெரிந்தது. அத்துடன் யுவன் ரசிகர்களும் இப்படத்தின் மூலம் குஷியாகி விட்டார்கள். இதனைத் தொடர்ந்து இப்படத்திற்கு இன்னும் பட பூஜையை ஆரம்பிக்கவில்லை. ஆனால் அதற்குள் தளபதி 68 படத்தின் ஆடியோ ரைட்ஸ் 24 கோடிக்கு விற்பனை ஆகிவிட்டதாம்.

ஆனால் லியோ படத்திற்கு அனிருத் இசையமைத்த பொழுதே 15 கோடிக்கு தான் ஆடியோ ரைட்ஸ் விற்பனை ஆகி இருக்கிறது. தளபதி 68 படத்தில் யுவன் இசையமைக்கிறார் என்று தெரிந்தும் பல கோடிக்கு லாபம் பார்த்து இருக்கிறது. இது கண்டிப்பாக யுவனுக்காக இல்லாட்டாலும் விஜய்க்காக இவ்வளவு பெரிய லாபம் அடைந்திருக்கிறது. மேலும் தமிழ் சினிமாவில் பூஜை ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே ஆடியோ ரைட்ஸ் இந்த அளவுக்கு விற்பனை ஆகி உள்ளது என்றால் அது தளபதி 68 படம் மட்டுமே.