தளபதி காசில் மங்களம் பாடும் விஜய்யின் வலதுகை.. பிரபல இசையமைப்பாளருக்கு வலை வீச்சு

நடிகர் விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். கடும் குளிரான காஷ்மீர் பகுதியில் இப்படத்தின் ஷூட்டிங் நடந்து வரும் நிலையில், இப்படத்தை வரும் அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி திரையில் ரிலீஸ் செய்ய படக்குழு மும்முரமாக உள்ளது. தயாரிப்பாளர் எஸ்.எஸ் லலித் குமாரின் 7 ஸ்கிறீன் ஸ்டுடியோஸ் இப்படத்தை தயாரித்து வரும் நிலையில், இணை தயாரிப்பாளராக விஜய்யின் மேனஜர் ஜெகதீஷ் உள்ளார்.

விஜய்யின் மேனஜரான இவர், விஜய்யின் மாஸ்டர் திரைபடத்திற்கும் இணை தயாரிப்பாளராக பணிப் புரிந்தவர். இவர் விஜயின் வலது கையாக இருக்கும் நிலையில், விஜய்க்கு பினாமியாக செயல்படுவதாகவும் கூறப்படுகிறது. உதாரணமாக லியோ திரைப்பத்தின் அப்டேட் வருவதற்கு முன்பாகவே, ப்ரீ ரிலீஸ் வசூலாக மட்டும் இப்படம் 300 கோடிக்கு வசூலானாது. இதனிடையே லியோ படத்தின், 30 சதவிகித வசூலை எடுக்க விஜய், அவரது மேனேஜர் ஜெகதீஷை இப்படத்தில் இணை தயாரிப்பாளராக சேர்த்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் கீர்த்தி சுரேஷ் நடிக்க போகும் புதுப்படம் ஒன்றையும் விஜய்யின் மேனேஜர் ஜெகதீஷ் தயாரிக்கப்போகிறார் என்ற செய்தியும் வெளியாகியுள்ளது. இந்நிலையில் அடுத்தப் படியாக விஜய்யின் காசை வைத்து, மேனேஜர் ஜெகதீஷ் தற்போது பிரபல இசையமைப்பாளரை வளைத்துப் போட்டுள்ளார். அண்மைக்காலமாக இசைக்கசேரிகள் பொது வெளிகளில் நடப்பது ட்ரெண்டிங்காகி வருகிறது.

அந்த வகையில் இசையமைப்பாளர் அனிரூத் பல இடங்களில் சென்று தனது இசையை ரசிகர்களுக்கு விருந்தாக வழங்கி வருகிறார். இவரது கச்சேரியை பார்க்கவே ரசிகர்கள் படையெடுத்து சென்று வருகின்றனர். அந்த வகையில், வரும் ஜூன் 24 ஆம் தேதி, கேரள மாநிலத்தில் அமைந்துள்ள கொச்சியில் அனிரூத் இசையமைக்க உள்ளார்.

இந்த இசை நிகழ்ச்சியை முழுக்க, முழுக்க விஜய்யின் மேனேஜர் ஜெகதீஸ் தான் ஏற்பாடு செய்து வருகிறாராம். இவர் இவ்வளவு பெரிய ஏற்பாட்டை அவரது பணத்தில் செய்கிறாரா, இல்லை விஜய்யின் பணத்தில் செய்கிறாரா என்பது தான் பெரும் கேள்விக்குறியாக உள்ளது. விஜய் நடிப்பது மூலமாகவே 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கி வருகிறார்.

தற்போது விஜய் நடிப்பின் மூலமாக வரும் லாபத்தை தாண்டி, அவரது படங்களில் வரும் லாபத்தையும் தனது மேனேஜர் மூலமாக பங்கிட்டு கொள்கிறார். மேலும் இதுபோன்று கச்சேரி நிகழ்ச்சிகளை நடத்தி தனது பணப் பலத்தை மேலும், மேலும் விஜய் உயர்த்தி வருகிறார். இவரை போல் எந்த நடிகரும் இப்படி பணம் சம்பாதிப்பதில் கில்லாடியாய் இல்லை என்பது தான் பலருக்கும் ஆச்சரியமான ஒன்றாக உள்ளது.