முழு அரசியல்வாதியாக மாறிய விஜய்.. அரசியலுக்காக எம்.ஜி.ஆரை மிஞ்சி தளபதி இறக்கிய 50 பேர்

ஒரு நடிகராய் வாழ்க்கையை ஆரம்பித்து அரசியலையும் ஒரு கை பார்த்தவர் தான் எம்ஜிஆர். நாட்டு மக்களிடையே அரசியலிலும் நல்ல பெயரை பெற்று தொடர்ந்து ஆட்சி செய்து வந்தார். இப்பொழுது அவரைப் போலவேவிஜய்யும்முழு அரசியல்வாதியாக மாறிவிட்டார்.

தீவிர மக்கள் பணியில் நல்லது செய்து கொண்டிருந்த எம்ஜிஆர் தமக்கு எங்கே எதிரிகளால் ஆபத்து வந்து விடுமோ என தன் பாதுகாப்பிற்காக நான்கு பயில்வான்களை கூடவே வைத்து இருந்தார். அவர்கள் தான் எம்ஜிஆருக்கு எந்த ஒரு ஆபத்தும் வராமல் பாதுகாத்து வந்தனர்.

அப்படி 70களின் காலகட்டங்களில் அடியாட்கள் என கூறப்பட்டவர்களை இப்பொழுது பவுன்சர்கள் என சொல்லிக்கொண்டு நடிகர் நடிகைகள் தங்கள் பாதுகாப்புக்காக அமர்த்தி வருகின்றனர். பவுன்சர்களுக்கு மட்டும் கோடிக்கணக்கில் நடிகர், நடிகைகள் கொட்டிக் கொடுக்கின்றனர்.

நடிகை நயன்தாரா மட்டும் பவுன்சர்களுக்கு கிட்டத்தட்ட இரண்டு கோடிகள் வரை சம்பளம் கொடுக்கிறார். இந்த சம்பளம் முழுவதும் தயாரிப்பார்கள் தலையில்தான் மிளகாய் அரைக்கப்படுகிறது. இப்பொழுது எம்ஜிஆர் போல் அரசியல் பணியில் இறங்கிய விஜய்யும் பவுன்சர்கள் உதவியை நாடி இருக்கிறார்.

அரசியலுக்காக எம்.ஜி.ஆரை மிஞ்சி தளபதி இறக்கி 50 பேர்

மக்கள் பணியாற்ற எல்லா ஊர்களுக்கும் செல்கிறார் விஜய். அங்கே தனக்கு எந்த ஒரு அசம்பாவிதமும் ஏற்படக்கூடாது என்பதில் உறுதியாய் இருக்கிறார். இப்பொழுது அவரும் துபாயிலிருந்து கிட்டத்தட்ட 50 பவுன்சர்களை இறக்கியுள்ளார். இவர்கள் அனைவரும் அஜகுஜா பயில்வான் போல் காட்சி அளிக்கிறார்கள்.

சென்னையில் பல்வேறு நலத்திட்ட பணிகளை விஜய் இன்று செய்து வருகிறார். திருவான்மியூரில் நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சியில் விஜய் 10 -12 தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவியருக்கு மேற்படிப்புக்காக உதவி செய்து, அவர்களை ஊக்குவிக்கிறார். இந்த விழாவில் விஜய்யின் பாதுகாப்புக்காகவும். ரசிகர்களை சீர்படுத்தவும் துபாயிலிருந்து 50 பவுன்சர்கள் வந்துள்ளனர். காதுகளில் மைக் பாக்கெட்டில் நவீன ஸ்பீக்கர்களுடனும் சுற்றி வருகிறார்கள்.