ஃபேன்பாயாக மாறிய தளபதி.. தியேட்டரில் படத்தைப் பார்த்து விஜய் கொடுத்த அலப்பறை

Actor Vijay: இப்போது ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருப்பது விஜய்யின் லியோ படம் தான். லோகேஷின் முந்தைய படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது முறையாக விஜய் மற்றும் லோகேஷ் இணைந்துள்ளதால் கூடுதல் எதிர்பார்ப்பு இருக்கிறது. அதோடு மட்டுமல்லாமல் லியோ படம் முழுக்க முழுக்க லோகேஷின் படமாக எடுக்கப்பட்டிருக்கிறது.

மேலும் இந்த படத்தில் நிறைய பிரபலங்கள் நடித்திருப்பதால் சுவாரஸ்யம் கூடுதலாக இருக்கிறது. இப்படம் அக்டோபர் 19 ரிலீஸ் ஆக உள்ள நிலையில் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் விஜய் நடிக்க உள்ளார். இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளது.

இதற்காக விஜய்க்கு மருத்துவ பரிசோதனை செய்து வருகிறார்கள். ஏனென்றால் விஜய் இந்த படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதால் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்த இருக்கிறார்கள். இந்நிலையில் ஃபேன் பாயாக மாறி விஜய் தியேட்டரில் அலப்பறை செய்துள்ளதை வெங்கட் பிரபு தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

எப்போதுமே விஜய்யின் எஃப்டிஎஃப்எஸ் பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக இருப்பார்கள். ஆனால் விஜய் Equalizer 3 படத்தைப் பார்த்து மெய்சிலிர்த்து போய் தியேட்டரில் பேன் பாயாக மாறி இருக்கிறார். அந்த போட்டோ தான் இப்போது இணையத்தில் விஜய் ரசிகர்களால் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

மேலும் அமெரிக்கா சென்று உள்ள நிலையில் அங்கு தான் விஜய் இந்த படத்தை பார்த்து உள்ளார். விரைவில் தளபதி 68 படத்திற்கான அப்டேட் வெளியாக இருக்கிறது. தளபதியின் லியோ படத்தை பார்க்க இதே போல் ஃபேன் பாயாக ரசிகர்கள் பலரும் ஆர்வமாக எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

சமீபத்தில் ரஜினியின் ஜெயிலர் படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றதுடன் வசூலை வாரி குவித்து தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் வசூல் செய்த படமாக இருக்கிறது. இந்த படத்தை லியோ படம் நிச்சயம் குறுகிய நாட்களிலேயே முறியடிக்கும் என்று ரசிகர்கள் நம்புகிறார்கள். விஜய் அந்த நம்பிக்கையை காப்பாற்றுகிறாரா என்பது இன்னும் சில மாதங்களில் தெரிந்து விடும்.