விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் வாரிசு படம் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்நிலையில் வாரிசு படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் தளபதி 67 படத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்தை லலித்குமார் தயாரிக்க உள்ளார். ஏற்கனவே இவர்களது கூட்டணியில் வெளியான மாஸ்டர் படம் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு பெற்றது.
இந்த சூழலில் மீண்டும் இதே கூட்டணி இணைய உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் தளபதி 67 படத்தில் ஆறு வில்லன்கள் என கூறப்பட்டது. அதன்படி பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், பிரித்விராஜ், பகத் பாஸில், கௌதம் மேனன், விஷால் மற்றும் மிஸ்கின் பெயர்கள் கூறப்பட்டது.
ஆனால் இப்போது படப்பிடிப்பு தாமதமாவதால் ஒவ்வொரு நடிகர்களும் தளபதி 67 படத்திலிருந்து விலகிக் கொண்டிருக்கிறார்கள். முதலாவதாக மலையாள நடிகர் பிரித்விராஜ் இந்த படத்தில் இருந்து விலகினார். இப்போது பகத் பாசிலும் விலகி விட்டாராம்.
தற்போது பகத் பாசிலுக்கு பதிலாக நிவின்பாலி ஒப்பந்தம் ஆகி உள்ளது. அடுத்ததாக அவர் நடிப்பில் வெளியாக உள்ள தமிழ் படம் வெற்றி அடைந்தால் அவரும் இந்த படத்தில் இருந்து வெளியேறி விடுவார் என்ற பேச்சுக்கள் அடிபட்டு வருகிறது. இதனால் ரசிகர்கள் மத்தியில் இப்போது குழப்பம் நிலவி வருகிறது.
அதாவது இதில் யார் நடிக்கிறார்கள், நடிக்கவில்லை என்ற உறுதி பட தகவல் வெளியாகாமல் உள்ளதால் ரசிகர்கள் தங்களுக்குள்ளாகவே ஒவ்வொரு நடிகர்களை கற்பனை செய்து வைத்துள்ளார்கள். ஆனால் சஞ்சய் தத், கௌதம் மேனன், விஷால், மிஸ்கின் ஆகியோர் உறுதிப்பட நடிக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. லோகேஷ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டால் மட்டுமே இதற்கான விடை கிடைக்கும்.