Thalapathy Vijay : விஜய் யாரும் நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவுக்கு எட்ட முடியாத உயரத்தில் இருக்கிறார். ஆரம்பத்தில் இந்த மூஞ்செல்லாம் ஹீரோவா என பிரபல நாளிதழில் விமர்சிக்கப்பட்டார் விஜய். இப்போது அவரது பேட்டி கிடைக்காதா என பெரிய ஊடகங்கள் காத்துக் கிடக்கின்றனர்.
அதோடு இப்போது தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியையும் தொடங்கி உள்ள நிலையில் வருகின்ற 2026 ஆம் ஆண்டில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இருக்கிறார். இந்த சூழலில் விஜய்யை பார்க்க சென்ற இடத்தில் அவமானம் நேர்ந்ததாக ஹீரோ ஒருவர் கூறியிருக்கிறார்.
ரவி இயக்கத்தில் 2001 ஆம் ஆண்டு வெளியான ஷாஜகான் படத்தில் விஜய்க்கு இணையான ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்தவர்தான் கிருஷ்ணா. இவர் சமீபத்திய ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளிக்கும் போது, அதிர்ச்சி தரும் தகவலை கூறியிருக்கிறார். அதாவது சில வருடங்களுக்கு முன்பு ஒரு நிகழ்ச்சிக்காக சென்னை வந்துள்ளார் கிருஷ்ணா.
அப்போது மிக அருகில் விஜய்யின் படப்பிடிப்பு நடந்து வருவதாக தெரிந்ததால் அவரை சந்திக்க செல்லலாம் என்று நினைத்தாராம். அந்த நேரத்தில் தொலைபேசி வாயிலாக பேசிவிட்டு போகலாம் என்று தொடர்பு கொண்டு இருக்கிறார். அப்போது அவரது மேனேஜர் விஜய்யை பழையபடி நினைத்தீர்களா, இப்போது அவருடைய ரேஞ்சே வேற, ஷாஜகான் படத்தில் நடித்த விஜய் இப்போது கிடையாது என்று சொல்லி ஃபோனை வைத்து விட்டாராம்.
இதைக் கேட்டு மிகவும் வருத்தப்பட்டதாக கிருஷ்ணா அந்த பேட்டியில் கூறியிருக்கிறார். ஏனென்றால் நான் வேறு யாரோ கிடையாது, அவருடன் ஒரு படத்தில் சேர்ந்து நடித்திருக்கிறேன். இதனால் தான் அவரை ஒரு முறை பார்த்து பேசலாம் என்று நினைத்தபோது விஜய்யின் மேனேஜர் இவ்வாறு சொன்னது வேதனை அளித்ததாக கூறியுள்ளார்.