இப்ப வரை மீனா க்ரஷில் இருக்கும் அந்த ஹீரோ.. ரஜினி கமலுக்கு வயிற்றெரிச்சலை ஏற்படுத்திய நடிகர்

சினிமாவில் எத்தனை நடிகைகள் வந்து நடித்திருந்தாலும் ஒரு சில நடிகைகளை நாம் எப்போதும் எந்த காலமானாலும் மறக்கவே முடியாது. அதில் மிக முக்கியமான நடிகை தான் கண்ணழகி மீனா. இவருடைய மிகப்பெரிய பிளஸ் இவரின் கண்களால் அனைத்து முகபாவனையும் காட்டி நடிக்கக் கூடியவர். இன்றைக்கும் இவருக்கு அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

அப்படிப்பட்ட இவர் 90களில் பலபேர் தூக்கத்தை கெடுத்தவர். குழந்தை நட்சத்திரமாக ரஜினி படத்தில் நடித்திருந்தாலும் அவருக்கே ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை பெற்றவர் இவராகத்தான் இருக்க முடியும். ரஜினி, கமல், அஜித் என பெரிய ஹீரோகளுடன் நிறைய படங்களில் நடித்து ஒரு ரவுண்டு வந்தவர். இவருக்கு சினிமாவில் இருக்கும் பல பிரபலங்களும் ரசிகர்களாக இருந்திருக்கிறார்கள்.

அத்துடன் மீனாவின் மேல் இருந்த ஆசையால் பல ஹீரோக்கள் ப்ரொபோஸ் பண்ணி இருக்கிறார்கள். ஆனால் அவர்களிடம் இவர் சிக்கவே இல்லை. அதன்பின் கடைசியாக ஒரு தொழிலதிபரை கல்யாணம் பண்ணி குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டார். அவர் கணவரும் கோவிட் சமயத்தில் இறந்துவிட்டார்.

ஆனால் 90களில் நிறைய நடிகர்கள் இவர் மீது க்ரஷில் இருந்தாலும் இவர் தமிழ் நடிகர்களை விட்டுவிட்டு பாலிவுட் நடிகரான ரித்திக் ரோஷன் மீது ஏக்கத்தில் இருந்திருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த எந்த படங்களாக இருந்தாலும் அந்தப் படங்கள் ரிலீஸ் ஆன முதல் நாள் பார்த்து விடுவாராம்.

இது தமிழ் சினிமாவில் இருக்கும் பல நடிகர்களுக்கு வயிற்றெரிச்சலை ஏற்படுத்தி இருக்கிறது. அதிலும் ரஜினி, கமலுக்கு ஏன் நம்மளை விட ரித்திக் ரோஷன் மேல் இப்படி பைத்தியமாக இருக்கிறார் என்று ஆச்சரியப்பட்டு இருந்திருக்கிறார்கள். ஒருவித பொறாமையும் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.

இப்படி தமிழ் சினிமாவின் நடிகர்களை டீலில் விட்டு பாலிவுட் நடிகர் மீது ஆசைப்பட்டிருக்கிறார். அதிலும் மிகப்பெரிய ஹைலைட்டை இவருக்கு ரித்திக் ரோஷன் மாதிரி தான் மாப்பிள்ளை வரவேண்டும் என்று பெரிய ஆசையாக வைத்திருந்திருக்கிறார். அதே மாதிரி தான் மாப்பிள்ளையும் பார்க்க வேண்டும் என்று வீட்டில் கூறி இருக்கிறார். அந்த அளவுக்கு அவர் மீது மிகப்பெரிய ஏக்கத்துடன் இருந்திருக்கிறார்.