தொடர் தோல்வியால் ஹோட்டல் தொடங்கலாம் என முடிவெடுத்த நடிகர்.. அசுரத்தனமான வசூலால் மாறிப்போன வாழ்க்கை

இந்திய சினிமாவில் எத்தனையோ நடிகர்கள் பல வெற்றிப்படங்கள், கலவையான படங்கள் என கொடுத்தாலும், அவர்களின் படங்கள் தோல்வியடைந்தால் மார்க்கெட் இழந்து சிரமப்படுவர். இருந்தாலும் சில நடிகர்கள் முயற்சி செய்து மீண்டும் படங்களில் நடிப்பதை வாடிக்கையாக்கி கொள்வார்கள். இந்த விஷயம் பெரிய முன்னை நடிகர்களுக்கு அதிகமாக பொருந்தும் .

அதையும் தாண்டி இவர்களது படங்கள் தொடர் தோல்வியடைந்தால் நடிப்பை விட்டு விலக கூட யோசிப்பார்கள். அப்படி பாலிவுட் நடிகர் ஒருவர் தொடர் பட தோல்வியால் பல வருடங்கள் படங்களில் நடிக்காமல் இருந்த நிலையில், ஹோட்டல் வைத்து பிழைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளார்.பொதுவாகவே பாலிவுட் நடிகர்கள் தென்னிந்திய நடிகர்களை காட்டிலும் அவர்களுக்கு உலகம் முழுதும் பல ரசிகர்கள் இருப்பார்கள்.

அதிலும் அமெரிக்கா, கனடா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் பாலிவுட் நடிகர்களின் படங்களுக்கென பிரத்யேகமான ரசிகர்கள் பட்டாளம் உண்டு. மேலும் சில நடிகர்களுக்கு அவர்கள் செல்லும் நாடுகளில் கூட பல சலுகைகள் கூட உண்டு. அப்படி கால் பதித்த இடங்களிளெல்லாம் தனது வெற்றியையும், தனது நடிப்பு திறமையையும் காண்பித்து இந்திய சினிமாவிலேயே சிறந்த கான் நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் ஷாருக்கான்.

1992 ஆம் ஆண்டு வெளியான திவானா என்ற ஹிந்தி படத்தின் மூலமாக அறிமுகமாகி, தற்போது இந்திய அளவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக வலம் வருகிறார். இவர் நடிப்பில் அண்மையில் பேன் இந்தியா படமாக வெளியான பதான் படம் சக்கைப்போடு போட்ட நிலையில், உலக அளவில் 700 கோடி வரை வசூலை வாரி குவித்துள்ளது. தீபிகா படுகோன், சல்மான் கான், ஜான் ஆப்ரஹாம் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம் ஆக்ஷன் மாஸ் காட்சிகளுடன் ரிலீசானது.

இப்படத்தில் நடிப்பதற்கு முன்பாக கடந்த 2018 ஆம் ஆண்டு ஷாருக்கான் நடிப்பில் உருவான ஜீரோ திரைப்படம் தோல்வியடைந்த நிலையில், 5 வருடங்கள் கழித்து பதான் திரைப்பத்தில் ஹீரோவாக நடித்து ஷாருக்கான் வெற்றி வாகை சூட்டியுள்ளார். இந்நிலையில் தொடர் தோல்வி படங்கள் கொடுத்து வந்த சமயத்தில் ஷாருக்கான் நடிப்பை ஓரங்கட்டிவிட்டு ஹோட்டல் தொடங்கலாம் என முடிவு செய்தாராம்.

மேலும் 50 வயதை கடந்த ஷாருக்கான் வயதாகி விட்டது, இனிமேல் நம்மை ரசிகர்கள் படங்களில் ரசிக்க மாட்டார்கள் என்ற எண்ணத்தில் இந்த முடிவை எடுத்துள்ளார். ஆனால் பதான் திரைப்படத்தில் கதை பிடித்துப்போக எதர்ச்சையாக நடிக்கலாம் என ஷாருக்கான் முடிவெடுத்து, தற்போது ஷாருக்கானின் வாழக்கையே மீண்டும் இளமை பொங்க மாற்றியுள்ளது. மேலும் இந்த வெற்றியை தொடர்ந்து ஷாருக்கான் அடுத்தடுத்து படங்களில் நடிக்க ஆயத்தமாகி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.