என்னை பேட்டி எடுத்தவங்க எல்லாம் டாப்ல போய்ட்டாங்க.. தேம்பித்தேம்பி அழும் ஜெயம் ரவி

அக்கட தேசத்து குழந்தை நட்சத்திரமாக நடித்து நம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக கலக்கிக் கொண்டு இருப்பவர் ஜெயம் ரவி. அவர் நடித்த முதல் படமே அவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை கொடுத்தது. அதைத் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் அவர் ஹீரோவாக நடித்தார்.

தொடர்ச்சியாக பல படங்களில் நடித்தாலும் அவை எல்லாம் அவருடைய முதல் படம் அளவுக்கு ரசிகர்களை கவர தவறியது. அதன் பிறகு சமூக கருத்துக்களை சொல்லும் இயக்குனரின் படத்தில் நடித்தார். அந்தப் படம் விமர்சன ரீதியாக நல்ல பெயரை பெற்றாலும் நடிகருக்கு அதன்பிறகு சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இதனால் மன உளைச்சலில் இருந்த ஜெயம் ரவி எப்படியாவது தன்னை நிரூபித்து விட வேண்டும் என்ற நோக்கில் உடலை வருத்திக் கொண்டு பல படங்களில் நடித்தார். அதன் பிறகு சமூக அவலங்கள் பற்றிய கருத்தை கொண்ட அந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் அவருக்கு வெற்றியை தேடி தந்தது.

என்னதான் அப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றாலும் அதிக பாராட்டு கிடைத்தது என்னவோ அந்த படத்தில் நடித்த வில்லன் நடிகருக்கு தான். இருந்தாலும் விடாமுயற்சியாக ஜெயம் ரவி அவ்வப்போது படங்களில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார்.

அவருக்கு பின்பு அறிமுகமான நடிகர்கள் அனைவரும் உச்சத்தில் இருக்கும் பொழுது தான் மட்டும் அதே நிலையில் இருக்கிறோம் என்ற ஆதங்கமும் அவருக்கு உள்ளது. மேலும் தன்னை பேட்டி எடுத்த ஒரு நடிகை இன்று சினிமாவில் வேற ரேஞ்சில் இருக்கிறார். அவருடைய ஆடியோ வெளியீட்டு விழாவே மிகவும் பிரம்மாண்டமாக நடந்தேறியது.

ஆனால் நான் மட்டும் அதே ரேஞ்சில் இருக்கிறேன் என் நிலை இப்படி ஆகிவிட்டதே என்று நடிகர் தனக்கு நெருக்கமானவர்களிடம் புலம்பித் தள்ளுகிறாராம். நடிகர் தற்போது நடித்து வரும் வரலாற்று திரைப்படத்தை தான் முழுமையாக நம்பி இருக்கிறாராம். இந்த படமாவது அவர் எதிர்பார்த்த பெயரை தருகிறதா என்று பார்ப்போம்.