Dhanush: நடிகர் என்பதைத் தாண்டி தனுஷ் இப்போது தயாரிப்பாளர், பாடகர், இயக்குனர் என பல முகங்களை காட்டி வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த கேப்டன் மில்லர் படு மிரட்டலாக இருந்தது. அதையடுத்து அவர் நடித்து இயக்கியுள்ள ராயன் பட ரிலீசுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் எஸ் ஜே சூர்யா, செல்வராகவன், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படம் தனுசுக்கு 50வது படம் ஆகும். அதுமட்டுமல்லாமல் இந்த ராயன் அவருடைய 5 வருட கனவு என்ற ஒரு ஸ்பெஷலும் இருக்கிறது.
மேலும் மொட்டை தலையுடன் இரத்த கலவையாக வெளிவந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரே வேற லெவலில் இருந்தது. இது ஒரு பக்கம் இருக்க செல்வராகவன் தன்னுடைய தம்பியை பற்றி ஓவராக புகழ்ந்து பேசி கொண்டிருக்கிறாராம். அதிலும் என்னை விட தனுஷ் தான் பெஸ்ட் இயக்குனர் என்று துதி பாடி வருகிறாராம்.
சமீபத்தில் செல்வராகவனின் போஸ்டரை பட குழு வெளியிட்டு இருந்தது. மேலும் தனுஷ் உங்களை இயக்குவேன் என நினைத்து கூட பார்க்கவில்லை என பெருமையாக குறிப்பிட்டு இருந்தார். அதற்கு செல்வராகவன் வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி சார் என கூறினார்.
அது மட்டுமின்றி தனுஷ் இப்படத்திற்காக கடின உழைப்பை கொடுத்திருக்கிறார். இது என்னுடைய கதை என்று சில பேர் சொல்கின்றனர். ஆனால் இதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. இது முழுக்க முழுக்க தனுஷின் கனவு படம்.
இப்படம் நிச்சயம் பெரிய அளவில் வெற்றி பெறும் என்றெல்லாம் வாய்க்கு வாய் புகழ்ந்து தள்ளி வருகிறாராம். இதுவே படத்திற்கு பிரமோஷன் ஆக அமைந்த நிலையில் ராயன் பாக்ஸ் ஆபிஸை கலக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.