Ajith: அஜித்தை பொறுத்தவரை நடிப்பது என்னுடைய வேலை அதை நான் சரிவர செய்ய வேண்டும். அது மட்டும் தான் என்னுடைய முழு கவனம் என்பதற்கு ஏற்ப, தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கக் கூடியவர். அதனால் தான் எந்தவித ரசிகர் மன்றமும் வேண்டாம் என்று சொல்லி, எந்த ஒரு சமூக வலைதளங்களிலும் அக்கவுண்டை வைத்துக் கொள்ளும் அளவிற்கு அவருக்கு ஆர்வம் இல்லை.
ஆனாலும் அப்படி இவர் ஒதுங்கி இருந்தாலும் ரசிகர்கள் இவரை விடுவதாக இல்லை. இவருக்கு என்று கோடிக்கணக்கான ரசிகர்கள் வந்து கொண்டே தான் இருக்கிறார்கள். முக்கியமாக இவர் படத்தை அதிக அளவில் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் அளவிற்கு ரசிகர்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறார். இன்னும் சொல்லப் போனால் எந்த நிகழ்ச்சியிலும் இவரை பார்க்க முடியாது.
அதில் எதிலுமே கலந்து கொள்ளாமல் தனக்கென்று ஒரு வழியை தேடி அதன் மூலம் மட்டுமே நடித்து வருகிறார். அதிலும் அரசியல் சம்பந்தப்பட்ட விஷயங்கள் என்றால் தலைதெரித்து ஓடிவிடுவார். அப்படிப்பட்ட இவரை தற்போது அரசியலில் எப்படியாவது இழுத்து விட வேண்டும் என்று அவ்வப்போது அஜித்தை பிரைன்வாஷ் பண்ணி வருகிறார் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்த ரங்கராஜ் பாண்டே.
ஆரம்பத்தில் செய்தியாளராக இருந்தவர் தற்போது யூடியூப் மூலம் இவருடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார். அப்படிப்பட்ட இவருடன் நேர்கொண்ட பார்வை படத்தின் போது ஏற்பட்ட பழக்கத்தினால் இவர்கள் இருவரும் அடிக்கடி சந்தித்து பேசிக் கொள்கிறார். எத்தனையோ நடிகர்கள் இருக்கும் பொழுது அஜித் ஏன் இவருடன் மட்டும் ரகசியமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் என்று ஒரு கேள்விக்குறி எழும்புகிறது.
அந்த வகையில் இவர்களுடைய சந்திப்பு நிச்சயமாக அரசியல் சம்பந்தமாக தான் இருக்கும் என்ற பேச்சுக்கள் வெளி வருகிறது. அதுவும் மக்கள் நலனையும் தாண்டி அரசியலில் வித்தியாசமான ஒரு யுத்தியை பயன்படுத்த புதுமையான ட்ரிக்ஸ்ஸை அஜித்துக்கு திணித்துக் கொண்டு வருகிறார் ரங்கராஜ் பாண்டே.
அரசியல் யாரை தான் விட்டது என்பதற்கேற்ப அஜித்தும் உள்ளே நுழைந்து விட்டால் விஜய்க்கு மிகப்பெரிய சரிவை ஏற்படுத்தவும் வாய்ப்பு இருக்கிறது. ஒருவேளை அஜித்தை வைத்து விஜய்யின் அரசியல் வாழ்க்கைக்கு ஏற்படுத்தும் இடையூறுகளாக கூட பின்னணியில் இருந்து யாராவது செயல்படவும் வாய்ப்பு இருக்கிறது.