கேப்டன் விஜயகாந்த்தால் நடுத்தெருவுக்கு வந்த நடிகை.. இப்பவும் மீள முடியாத சூழ்நிலை

கேப்டன் விஜயகாந்த்தால் வாழ்வு பெற்றவர்கள் தான் தமிழ் சினிமாவில் அதிகம். ஆனால் அவரால் ஒரு நடிகை மட்டும் நடுத்தெருவுக்கு வரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சினிமாவில் ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்த விஜய்காந்த் யார் எதை கேட்டாலும் உதவும் மனப்பான்மை கொண்டவர்.

விஜயகாந்த் தன் வீட்டுக்கு வருபவர்களை ஒருபோதும் சாப்பிடாமல் அவர் அனுப்ப மாட்டாராம். இப்போதும் பலர் விஜயகாந்தின் தற்போதைய நிலைமையை பார்த்து வாரி கொடுத்த வள்ளலுக்கா இந்த நிலை என வருத்தப்படுவதை நம்மால் பார்க்க முடிகிறது. அவ்வாறு தேடி தேடி உதவி செய்யக்கூடியவர் கேப்டன் விஜயகாந்த்.

வைகைப்புயல் வடிவேலுக்கு வாழ்வு தந்ததும் விஜயகாந்த் தான். இப்படிப்பட்ட ஒருவரால் நடிகை பானுப்பிரியா வாழ்க்கையில் மிகப்பெரிய துயரம் ஏற்பட்டுள்ளது. அதாவது சத்ரியன், ராஜதுரை, காவியத்தலைவன், பரதன் போன்ற படங்களில் விஜயகாந்த் உடன் ஜோடி போட்டு பானுப்ரியா நடித்திருந்தார்.

அடுத்தடுத்து பானுப்ரியாவுக்கு பட வாய்ப்பு கிடைக்க முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார். ஆனால் எல்லோருக்குமே ஒரு ஆசை இருக்கும். அதாவது மிகக் குறுகிய காலத்திலேயே பணத்தை சம்பாதித்து விட வேண்டும் என்பதுதான். அப்படிப்பட்ட ஆசை தான் பானுப்பிரியாவுக்கும் வந்தது.

அதாவது அப்போது டாப் ஹீரோவாக இருந்த விஜயகாந்தை வைத்து ஒரு படத்தை தயாரிக்க வேண்டும் என்று நினைத்தார். அந்தச் சமயத்தில் புதுமுக இயக்குனர்களுக்கு விஜயகாந்த் வாய்ப்பு தந்து வந்தார். மேலும் பானுப்பிரியா கேட்டுக் கொண்டதால் அவர் தயாரிக்கும் படத்தில் விஜயகாந்த் நடிக்க சம்மதித்தார்.

ஆனால் அந்த படம் வெளியாகி தோல்வியை சந்தித்ததால் பானுப்பிரியாவுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டதாம். இதனால் தன்னுடைய சொத்துக்கள் அனைத்தையும் விற்கப்படும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளார். அதன் பின்பு கிடைத்த கதாபாத்திரத்தில் நடித்து ஓரளவு கடனை சமாளித்துள்ளார். ஆனால் இது அவரது வாழ்க்கையில் பெரிய அடியாக அமைந்தது. இப்போது வரை அதிலிருந்து மீள முடியாத சூழ்நிலை பானுப்பிரியாவுக்கு ஏற்பட்டது.