பல்லு இருக்கவன் பக்கோடா சாப்பிடுறான்.. பப்லுவை நக்கல் அடித்த நடிகை

வெள்ளி திரையில் இருந்ததை விட சின்னத்திரையில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் பப்லு பிருத்விராஜ். இதற்கு தற்போது 55 வயதாகிறது. சமீபத்தில் இவருடைய திருமண செய்தி இணையத்தில் பிரளயத்தையே ஏற்படுத்தி இருந்தது. அதாவது இவருக்கு 27 வயதில் ஆட்டிசம் குறைபாடு உடைய மகன் ஒருவர் உள்ளார்.

இந்த சூழலில் மலேசியாவைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணை பப்லு திருமணம் செய்து கொண்டதாக இணையத்தில் தகவல் வெளியானது. இதுகுறித்து பப்லு விளக்கமளித்திருந்தார். அதாவது அந்தப் பெண் ஆந்திராவைச் சேர்ந்தவர். ஒரு வருடமாக நாங்கள் இருவரும் பழகி வருகிறோம்.

அந்தப் பெண்ணுக்கு தற்போது 23 இல்ல, 24 வயது ஆகிறது. என் மகனுக்கும் அவரை மிகவும் பிடிக்கும். இன்னும் நாங்கள் சட்டப்படி திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆனால் விரைவில் திருமணம் செய்து கொள்வோம் என்ற பப்லு பிருத்விராஜ் ஊடகத்தில் பேட்டி கொடுத்திருந்தார்.

தனது மகனுக்கே திருமண வயது எட்டிய நிலையில் தற்போது பப்லுக்கு திருமணம் தேவையா என பலரும் விமர்சித்த வருகிறார்கள். இதில் சிலர் இது அவருடைய தனிப்பட்ட விஷயம், அதில் தலையிடுவது அநாகரீதம் என்று கூறிவருகிறார்கள். இது குறித்து சீரியல் நடிகை காஜல் பசுபதி ட்விட்டர் பதிவு ஒன்று போட்டு உள்ளார்.

சின்னத்திரை, வெள்ளிதிரை என இரண்டிலுமே தனது பங்களிப்பை கொடுத்தவர் நடிகை காஜல். சாண்டி மாஸ்டரை திருமணம் செய்து கொண்ட காஜல் சில காரணங்களை இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் காஜல் கலந்து கொண்டார்.

kaajal-pasupathi

இந்நிலையில் காஜல் தனது ட்விட்டர் பக்கத்தில் பல்லு இருக்கிறவன் பக்கோடா சாப்பிடுறான், இதுல உங்களுக்கு என்ன பிரச்சனை, பொறாம புடிச்சவங்களாம் என்று பப்லு பிரிதிவிராஜை நக்கலாக கிண்டலடித்துள்ளார். அதாவது 57 வயதிலும் தனது உடம்பை கட்டுமஸ்தாக வைத்துள்ளதால் அவர் திருமணம் செய்து கொள்கிறார் என்பது போல காஜல் கூறியுள்ளார்.