Actor Vishal: இன்று ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் ஹீரோவாக நடித்த மார்க் ஆண்டனி திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுக் கொண்டிருக்கிறது. ஆனால் இந்த படத்தில் என்னதான் விஷால் ஹீரோவாக இருந்தாலும், இது எஸ்ஜே சூர்யாவின் படம் என ரசிகர்கள் திரையரங்கில் அவரை கொண்டாடி வருகின்றனர்.
அந்த அளவிற்கு எஸ்ஜே சூர்யா தன்னுடைய நடிப்பால் ஹீரோ விஷாலை விழுங்கி விட்டார் என்றே சொல்லணும். இந்நிலையில் விஷால் தன்னுடைய சினிமா பயணத்தை துவங்கிய முதல் படத்தில் இணைந்து நடித்த நடிகை அடித்து சொன்ன விஷயம் இன்று வரை நடக்கவில்லை.
தயாரிப்பாளரின் மகனாக தமிழ் சினிமாவிற்கு வெகு சுலபமாக நுழைந்த விஷாலின் முதல் படம் செல்லமே. 2004 ஆம் ஆண்டு வெளியான இந்த படம் விஷாலுக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. ஆனால் படத்தின் முதல் நாள் ஷூட்டிங்கில் விஷாலை முதல் இரவு காட்சியில் நடிக்க வைத்தார் இயக்குனர்.
விஷால் பயந்து எதற்காக இதை இப்ப எடுக்க வேண்டும் என கேட்க உடனே இயக்குனர், ‘அதெல்லாம் ஒன்னும் இல்ல பயப்படாத, வா!’ என கூறி அந்த காட்சியில் நடிக்க வைக்க முயற்சி செய்தார். விஷாலுக்கு அதில் நடிக்க கூச்சம் எல்லாம் இல்லை. ஏனென்றால் அவர் நடிகராக வருவதற்கு முன் கூத்துப்பட்டறையில் நடிப்பு பயிற்சி பெற்றிருக்கிறார்.
ஆனால் முதல் இரவு காட்சியில் உடன் நடிக்கும் நடிகை இவரிடம் பழகாதது தான் இவருக்கு குறையாக இருந்துள்ளது. அதன் பின் செல்லமே படத்தின் கதாநாயகி ரீமா சென்னும் விஷாலும் பேசி பழகி இருவரும் நண்பர்களானார்கள். பின்பு இந்த காட்சிகள் அழகாக எடுக்கப்பட்டது.
அப்போது விஷால் இடம் ரீமாசென், ‘நீ சினிமாவுல பெரிய நடிகனா வருவ. எனக்கு நம்பிக்கை இருக்கு’ என்று கூறினாராம். ஆனால் இன்று வரை விஷால் பருப்பு வேகல. இதுவரை 35 படங்களில் ஹீரோவாக நடித்தும் விஷாலை இன்னும் வளர்ந்து வரும் நடிகராகவே பார்க்க முடிகிறதே தவிர, அவரால் டாப் நடிகராக மாற முடியவில்லை.