Manikandan : ஜெய் பீம் படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் பெற்றவர் தான் மணிகண்டன். இந்த படத்தில் ராசா கண்ணு என்ற கதாபாத்திரத்தின் மூலம் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருந்தார். அதன் பிறகு தான் இவருக்கு பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது.
இதையடுத்து அவருக்கு வித்தியாசமான பரிமாணத்தை கொடுத்த படம் தான் குட் நைட். இந்த படத்தில் மணிகண்டனுக்கு இணையாக நடித்திருந்தார் மீதா ரகுநாத். இப்படி ஒரு மனைவி கிடைத்தால் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்று இளைஞர்களை ஏங்க வைத்திருந்தார்.
மேலும் அந்த படம் வெளியான போது மணிகண்டன் மற்றும் மீதா ரகுநாத் ஆகியோரின் இணைத்து கிசு கிசுக்கள் வெளியானது. இது உண்மையாக இருக்குமோ என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் இப்போது காதும் காதும் வைத்தபடி மீதா ரகுநாத்க்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.
அவருடைய நிச்சயதார்த்த புகைப்படங்கள் தான் இப்போது இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. தமிழில் மீதா ரகுநாத் முதலும் நீ முடிவும் நீ மற்றும் குட் நைட் ஆகிய இரண்டு படங்களில் மட்டும் தான் நடித்திருக்கிறார். குட் நைட் படத்திற்குப் பிறகு அவருக்கு சினிமாவில் நல்ல எதிர்காலம் இருப்பதாக கூறப்பட்டது.
ஆனால் திடீரென அவரது நிச்சயதார்த்த புகைப்படங்கள் வெளியாகி உள்ளதால் சினிமாவில் நீடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. மீதா ரகுநாத் திருமணம் செய்து கொள்ள உள்ள மாப்பிள்ளையின் விபரம் எதுவும் தற்போது வெளியாகவில்லை. மேலும் விரைவில் அவர்களது திருமண தேதியை அறிவிப்பார் என எதிர்பார்க்கலாம்.
