ஹிட் ஃபார்முலாவை கெட்டியாக பிடித்துக் கொண்ட ஆதிக்.. ஏகே 63 கதை இதுதான்

AK 63 Movie Story: கடந்த வருடம் அஜித்தின் துணிவு வெளிவந்து மரண ஹிட் அடித்ததற்கு பிறகு சூட்டோடு சூடாக அடுத்த படம் வெளிவரும் என்றுதான் அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் யாருடைய போதாத காலம் என்று தெரியவில்லை விடாமுயற்சி ரசிகர்களுக்கு ரொம்பவே ஆட்டம் காட்டி வருகிறது.

இதோ அதோ என்று இழுத்து வந்த இப்படத்தின் சூட்டிங் அஜர்பைஜான் நாட்டில் நடந்து வந்த நிலையில் தற்போது அந்த ஷூட்டிங் முடிந்திருக்கிறது. அடுத்த கட்ட ஷெட்யூல் ஹைதராபாத்தில் ஆரம்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் அஜித்தின் அடுத்தடுத்த படங்கள் பற்றியும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. அதில் அவருடைய 63 வது படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் தான் இயக்கப் போகிறார் என கிட்டத்தட்ட உறுதியான தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

Also read: அஜித்துடன் வெற்றி துரைசாமியின் நெருக்கம் ஆரம்பித்த அந்த 3 இடம்.. யாருக்கும் இல்லாத ஒன்றை செய்த AK

அது மட்டுமல்லாமல் இப்படத்தின் பூஜை கூட சத்தம் இல்லாமல் நடந்து முடிந்து விட்டதாக ஒரு செய்தி இருக்கிறது. அதனால் எந்த நேரத்திலும் இப்படத்தை பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவரவும் அதிக வாய்ப்பு இருக்கிறது.

இந்த சூழலில் இப்படத்தின் கதை பற்றிய ஒரு செய்தியும் கசிந்துள்ளது. அதாவது இப்படம் 80 காலகட்டத்தில் கிராமத்தில் நடக்கும் ஒரு கதையாக தான் இருக்குமாம். ஏற்கனவே அஜித் விசுவாசம் படத்தில் இப்படி ஒரு கெட்டப்பில் நடித்து அசத்தியிருந்தார்.

அதைத்தொடர்ந்து 80 காலகட்ட ரெட்ரோ ஸ்டைலில் அவர் நடிக்கப் போகிறார் என்பதும் சுவாரசியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஆதிக்கின் முந்தைய படமான மார்க் ஆண்டனி கூட இது போன்ற ரெட்ரோ கால கதையாக தான் இருந்தது.

Also read: அஜித்தின் அடுத்த பட ஹீரோயின் இவர்தான்.. 31 வயது நடிகையுடன் ஜோடி போடும் ஏகே

அந்த ஹிட் ஃபார்முலாவை கெட்டியாக பிடித்துக் கொண்ட ஆதிக் தற்போது அஜித்தை வைத்து 40 வருடம் பின்னோக்கி செல்ல இருக்கிறார். இதன் மூலம் 80 காலகட்ட சுவாரஸ்ய விஷயங்களை நம் கண்களுக்கு விருந்தளிக்க இருக்கிறது இந்த கூட்டணி. இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திஷா பதனியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.