சினிமா வட்டாரத்தில் ஹாட் டாபிக்காக பேசப்படும் விஷயம் என்னவென்றால் அஜித் நடிப்பில் மிக பிரமாண்டமாக உருவாக இருக்கும் படத்தில் மகிழ்திருமேனி கூட்டணி அமைத்து இருப்பது தான். ஆனால் இவர் ஆரம்ப காலகட்டங்களில் இயக்குனர் செல்வராகவனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்துள்ளார். அப்பொழுது நடந்த ஒரு ரகசியத்தினை தற்பொழுது போட்டு உடைத்துள்ளார்.
இயக்குனர் செல்வராகவனின் உடன் பிறந்த சகோதரர் தான் நடிகர் தனுஷ். ஆரம்ப காலங்களில் தனுஷின் வெற்றிக்கு தான் இயக்கும் படங்களின் மூலம் உறுதுணையாக இருந்து வந்துள்ளார். அப்படியாக செல்வராகவனின் இயக்கத்தில் 2003 ஆம் ஆண்டில் வெளிவந்த திரைப்படம் தான் காதல் கொண்டேன். இப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.
ஆனால் முதலில் தனுஷ் நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தது இதயம் முரளிதனாம். இவரை மனதில் வைத்துக் கொண்டு தான் இயக்குனர் இப்படத்திற்கான கதையினை எழுதியுள்ளார். ஏனோ சில காரணங்களால் முரளிக்கு அந்த படம் கைநழுவி போனதால் காதல் கொண்டேன் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு தனுஷிற்கு கிடைத்தது. தற்பொழுது அதனை மகிழ்திருமேனி உடைத்து பேசி இருக்கிறார்.
மேலும் இப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக சோனியா அகர்வால் நடித்துள்ளார். காதலை மையமாக வைத்து வெளிவந்த இப்படம் தனுஷின் திரை வாழ்க்கைக்கு திருப்புமுனையாக அமைந்த படம் என்றே சொல்லலாம். அதுமட்டுமல்லாமல் திறமையாக நடிக்க கூடியவர் என்ற பெயரையும் பெற்று தந்தது.
இதனைத் தொடர்ந்து தனுஷ், செல்வராகவன் மற்றும் யுவன் அளித்த அந்த தாக்கம் திரையுலகத்தில் சில ஆண்டுகள் நீடித்தது. அதிலும் படத்தில் தனுஷ் முகத்தில் தாடியுடனும், புட்டி கண்ணாடியுடனும் கிளைமாக்ஸ்க்கு முன் திவ்யா, திவ்யா என்று போட்ட ஆட்டம் உண்மையில் அனைவரையும் அதிர வைத்தது என்றே சொல்லலாம்.
அது மட்டுமல்லாமல் ஒரு ஆதரவற்ற இளைஞனின் மனம் தேடும் அன்பு, அது கைநழுவி போகும் பொழுது அடையும் ஏமாற்றம் என நேர்த்தியாக பேசி இருக்கும் திரைப்படம் தான் காதல் கொண்டேன். அந்த அளவிற்கு தனுஷ் நடித்த படத்திற்கு மெருகேற்றி இருப்பார் இயக்குனர் செல்வராகவன். படத்தில் தனுஷின் கதாபாத்திரத்தில் முரளி நடித்திருந்தால் கூட அந்த அளவிற்கு படம் வெற்றி பெற்றிருக்குமா என்பது கேள்விக்குறிதான்.