ஒரே மீம்ஸ்ல விஷாலை நாரடித்த ப்ளூ சட்டை.. நம்ம மனசுல இருக்கிறத அப்படியே சொல்லிட்டாரே!

Vishal – Blue Sattai Maran: சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் சினிமாவில் உள்ள பிரபலங்களை கிண்டலடித்து தொடர்ந்து பதிவு போட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த வகையில் இப்போது நடிகர் விஷாலை விமர்சித்து தனது எக்ஸ் தளத்தில் ப்ளூ சட்டை மாறன் போட்டுள்ள பதிவு தான் இப்போது ட்ரெண்டாகி கொண்டிருக்கிறது.

அதாவது சமீபத்தில் நடிகர் மற்றும் தேமுதிக கட்சியின் தலைவருமான விஜயகாந்த் உடல்நல குறைவால் உயிரிழந்தார். அவருடைய இறப்பு தமிழகத்தில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது. அப்போது விஷால் அமெரிக்காவில் இருந்ததால் விஜயகாந்தின் இறுதி அஞ்சலிக்கு அவரால் வர முடியவில்லை.

இதை அடுத்து அண்ணே என்னை மன்னித்து விடுங்கள் என்று கதறி அழுது ஒரு வீடியோ போட்டு இருந்தார். மேலும் அரசியல் ஆளுமை, நடிகர் சங்க நிர்வாகி என்பதை காட்டிலும் நல்ல மனிதரை இழந்தது தன்னால் ஜீரணிக்க முடியவில்லை என விஷால் கதறி கதறி அந்த வீடியோவில் அழுது இருந்தார்.

இந்த வீடியோ இணையத்தில் ஒருபுறம் ட்ரோல் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் விஷால் இந்தியா வந்த பிறகு கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்தின் நினைவு இடத்தில் எப்படி அழப் போகிறார் என்று தமிழ்நாடு மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என ப்ளூ சட்டை பதிவிட்டு இருக்கிறார்.

அதோடுமட்டுமல்லாமல் எம்டன் மகன் படத்தில் வடிவேலு தன் அப்பா இறந்த போது சுடுகாட்டுக்கு வந்து வேறு ஒரு பெண்ணுடைய சமாதியில் அழுகும் புகைப்படத்தை ப்ளூ சட்டை பதிவிட்டு இருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் நம்ம மனசுல இருக்கிறதா அப்படியே ப்ளூ சட்டை சொல்லி இருக்கிறார் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

ஒரே மீம்ஸ்ல விஷாலை நாரடித்த ப்ளூ சட்டை

Blue-sattai-maran
Blue-sattai-maran