தமிழகத்தில் மட்டுமல்ல உலக அளவில் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கும் தளபதி விஜயின் எனர்ஜி லெவலை பார்த்து மிரண்டு போய் இருப்பதாக முன்னணி பாலிவுட் பிரபலம் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். தற்போது விஜய் பீஸ்ட் படத்தை தொடர்ந்து வாரிசு படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.
இந்த படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என்பதால் அந்த படத்தை குறித்து அவருடைய ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர். இந்நிலையில் நடிப்பில் மட்டுமல்லாமல் நடனத்திலும் பிச்சு உதறும் விஜய், ஏதோ ஒரு சீக்ரெட் டயட்டை ஃபாலோ செய்வார் போல் தெரிகிறது.
ஏனென்றால் அந்த அளவிற்கு விஜய்யின் எனர்ஜி லெவல் பிரம்மிக்க வைக்கிறது. அதை நிச்சயம் நானும் கற்றுக்கொள்ள விரும்புகிறேன். அவர் நடனம் ஆடுவதற்கு முன் என்ன சாப்பிடுகிறார் என்பதையும் தெரிந்துகொள்ள நினைப்பதாகவும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ரித்திக் ரோஷன், விஜயை குறித்து ஆச்சரியத்துடன் பேசியுள்ளார்.
கட்டுக்கோப்பான உடல் அமைப்பில் இருக்கும் ரித்திக் ரோஷனுக்கு எக்கச்சக்கமான தமிழ் ரசிகர்களும் உள்ளனர். மேலும் அவர் தினம்தோறும் எவ்வளவு மணி நேரம் உடற்பயிற்சி போகிறீர்கள் என்ற கேள்விக்கு, காலையில் அரை மணி நேரமும் மாலையில் ஒரு மணி நேரமும் உடற்பயிற்சி செய்கிறாராம்
என்னதான் உடற்பயிற்சி மேற்கொண்டு கட்டுக்கோப்பான உடல் அமைப்பை வைத்திருந்தாலும், விஜய்யின் எனர்ஜி லெவல் அவரை பொறாமைகளையும் செய்கிறதாம். சில நேரங்களில் படத்தில் அவர் ஆடிய ஆட்டத்தைப் பார்த்து மெய்சிலிர்த்துப் போனதாகவும் தெரிவித்திருக்கும் இந்த பேட்டி, தற்போது தளபதி ரசிகர்களால் சோசியல் மீடியாவில் ட்ரெண்ட் ஆகிக்கொண்டிருக்கிறது.
மேலும் ஆயிரம் கோடி பட்ஜெட்டில் அறிவியல் சம்பந்தப்பட்ட படத்தினை நீருக்கடியில் உருவாக்கும் திட்டத்தின் ஷங்கர் இருக்கிறார். அந்தப்படத்தில் ரித்திக் ரோஷனும் ராம் சரணும் இணைந்து நடிப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது.