ரஜினிக்கு பரிந்து கொண்டு விஜய்யை வாரிவிடும் பிரபலம்.. 100 கோடி சம்பளம் தொட இதுதான் காரணம்

Actor Vijay: சமீபகாலமாக டாப் ஹீரோக்களின் சம்பளத்தை எடுத்துக் கொண்டால் ஜெட் வேகத்தில் உயர்ந்திருக்கிறது. அதுவும் குறிப்பாக விஜய் தான் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் முதலிடத்தில் இருக்கிறார். அதன்படி ஏஜிஎஸ் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் தளபதி 68 படத்திற்கு விஜய்யின் சம்பளம் 200 கோடி என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறதாம்.

இந்நிலையில் ரஜினிக்கு பரிந்து கொண்டு பேசுவதாக நினைத்து விஜய்யை காலை வாரி விடும்படி பிரபலம் ஒருவர் கூறுகிறார். அதுவும் விஜய்யின் சம்பள உயர்வு எப்படி வந்தது என்றால் அவரே உருவாக்கிக் கொண்டது என்று கூறுகிறார். சமீபகாலமாக யூடியூபில் சர்ச்சையான கருத்துக்களை கூறி வருகிறார் நடிகர் மீசை ராஜேந்திரன்.

அதுவும் குறிப்பாக விஜய்யை பற்றி மோசமான விஷயங்களை கூறி வருகிறார். ஜெயிலர் வசூலை லியோ முறியடித்தால் தனது மீசையை எடுத்து விடுகிறேன் என நேரடியாக சவால் விட்டிருந்தார். இப்போது விஜய் அதிகமாக சம்பளம் வாங்கிய புலி படத்தை தயாரித்தவர் அவரின் மேனேஜர் செல்வகுமார் தான். இந்த படத்தை எடுக்க விஜய் தான் பணம் கொடுத்திருக்கிறார்.

அதிலிருந்த தனது சம்பளத்தை 70 கோடியாக உயர்த்தி இருந்தார். அதன் பிறகு மாஸ்டர் படத்தில் விஜய்யின் சம்பளம் 100 கோடியை தாண்டியது. அந்தப் படத்தை தயாரித்தது விஜய்யின் சொந்த தாய் மாமன் சேவியர் பிரிட்டோ. இவ்வாறு தனது நெருங்கிய உறவினர் மற்றும் நட்பு வட்டாரத்தை வைத்து படத்தை தயாரித்து சம்பளத்தை உயர்த்துக் கொண்டார் என மீசை ராஜேந்திரன் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

அப்படி பார்த்தால் விஜய்க்கு மட்டும் இன்றி ரஜினி, அஜித் போன்ற நடிகர்களின் சம்பளமும் படத்துக்கு படம் அதிகமாகி கொண்டு தான் இருக்கிறது. இப்போது ரஜினி கலாநிதி மாறனின் ஜெயிலர் படத்தில் நடித்த போது 120 கோடி சம்பளம் வாங்கி இருந்தார். இதை தவிர்த்து படத்தில் ஷேர் மற்றும் கார் என பரிசு ச்வழங்கியதே 100 கோடிக்கு மேல் இருக்கும்.

அதோடு மட்டுமல்லாமல் கலாநிதி, லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் படத்தில் ரஜினிக்கு 220 கோடி சம்பளம் என்று கூறப்படுகிறது. இவ்வாறு ஒரு நடிகரின் வளர்ச்சி தான் அவரின் சம்பளத்தை தீர்மானிக்கிறதே தவிர மீசை ராஜேந்திரன் சொன்னது போல தனக்கு தானே சம்பளத்தை உயர்த்திக்கொள்ள முடியாது என பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.