இந்த மனுஷன் எப்படி தான் நடிக்கிறார்.. சூரியை வியந்து பார்க்க வைத்த பிரபலம்

இப்போது எங்கு பார்த்தாலும் விடுதலை படத்தை பற்றியும், சூரியை பற்றிய பேச்சு தான் உலாவிக் கொண்டிருக்கிறது. நீண்ட நாட்களாக படப்பிடிப்பு நடத்தப்பட்டு வந்த விடுதலை படம் எப்போது ரிலீஸாகும் என ரசிகர்கள் கேட்டு அழுத்தி விட்டனர். ஆனால் அவர்களின் காத்திருப்புக்கு சரியான படத்தை கொடுத்துள்ளார் வெற்றிமாறன்.

விடுதலை வெற்றியை தொடர்ந்து பல்வேறு ஊடகங்களுக்கு வெற்றிமாறன் மற்றும் சூரி பேட்டி அளித்து வருகிறார்கள். அந்த வகையில் பிரபல சேனல் ஒன்றில் பேசிய சூரி தான் பிரமித்து போய் பார்த்த பிரபலம் ஒருவரை பற்றி புல்லரித்து பேசி உள்ளார். அந்த வீடியோ இப்போது வைரலாக பரவி வருகிறது.

அதாவது விடுதலை படத்தில் ஆரம்பத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக நுழைந்தவர் தான் விஜய் சேதுபதி. அதன் பின்பு அவரது கதாபாத்திரம் விரிவடைந்து இருந்தது. மேலும் விஜய் சேதுபதி எப்படி பயிற்சி எடுக்கிறார், எப்படி நடிக்கிறார் என்பதை பார்க்க சூரி ஆர்வமாக இருந்தாராம்.

ஆனால் அவர் எந்த ஆயத்தமும் இல்லாமல் நேரடியாக வந்து நடித்துவிட்டு செல்வாராம். அவர் எப்படி நடிக்கிறார் என்பதை யாராலும் கண்டுபிடிக்க முடியாது. மேலும் விடுதலை படத்தை பார்க்கும் போது முதல் 10 நிமிடம் தான் கதாநாயகனாக நடித்தேன் என்பதற்காக பார்க்க ஆரம்பித்தேன்.

அதன் பிறகு போக போக விஜய் சேதுபதியின் வாத்தியார் கதாபாத்திரம் என்னை பிரமிக்க செய்தது. கடைசியில் படம் முடியும்போது என்னை மீறி கைகள் தட்டினேன். மேலும் இரண்டு கைகள் பத்தவில்லை, சொல்லப்போனால் மற்றவர்கள் கையையும் இழுத்து பிடித்து தட்டி இருப்பேன்.

அந்த அளவுக்கு விஜய் சேதுபதி நடிப்பு அரக்கன். அவருடன் நடித்ததில் மகிழ்ச்சி என சூரி புகழ்ந்து பேசுகிறார். மேலும் இதுவரை காமெடி நடிகராக மட்டுமே ரசிகர்களை மகிழ்வித்த சூரி கதாநாயகனாக மிரள வைத்ததற்கு பல பிரபலங்களும் இவருக்கும் பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.