மிரட்டப்பட்டு தாலி கட்டிய மாதம்பட்டி ரங்கராஜ்.. பிரபலம் கூறிய அதிர்ச்சி தகவல்

Madampatty Rangaraj : கடந்த சில நாட்களாகவே இணையத்தில் பேசுபொருளாக மாறியது மாதம்பட்டி ரங்கராஜின் இரண்டாம் திருமணம் தான். தன்னுடைய ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிஸில்டாவை திருமணம் செய்து புகைப்படங்கள் வெளியானது.

இதுகுறித்து பயில்வான் ரங்கநாதன் யூடியூப் சேனலில் பேசி இருக்கிறார். அதாவது மாதம்பட்டி ரங்கராஜின் டார்கெட்டே டைவர்ஸான நடிகைகள் தான். இவர் ஏற்கனவே இரண்டு மூன்று விவாகரத்து பெற்ற பெண்களுடன் லிவ்விங் ரிலேஷன்ஷிப்பில் இருந்திருக்கிறார்.

இப்போது ஜாயுடன் பழகிய நிலையில் அவர் கர்ப்பம் ஆகிவிட்டார். இதனால் ரங்கராஜ் என் குழந்தையை வயிற்றில் சுமப்பதால் என்னை திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால் போலீசில் புகார் கொடுத்து விடுவேன் என்று கூறியிருக்கிறார்.

மாதம்பட்டி ரங்கராஜை விமர்சித்த பிரபலம்

இந்த மிரட்டிலில் பயந்து கோயிலுக்கு அழைத்து சென்று மாதம்பட்டி ரங்கராஜ் திருமணம் செய்து கொண்டார். ஆனால் இன்னும் அவர் முதல் திருமணம் செய்து கொண்ட நிலையில் அவர் விவாகரத்து செய்யவில்லை. இதன் காரணமாக இந்த திருமணம் செல்லாது என்றும் பயில்வான் கூறியிருக்கிறார்.

பயில்வான் ரங்கநாதன் பேசியது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மாதம்பட்டி ரங்கராஜ் இப்படிப்பட்டவரா என்ற விமர்சனங்கள் எழுந்து வருகிறது. மேலும் தனது இரண்டாம் திருமணம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்னும் ரங்கராஜ் வெளியிடவில்லை.

ஒருவேளை ஜாய் மற்றும் ரங்கராஜ் இடையே பிரச்சனை காரணமாகத்தான் இந்த புகைப்படத்தை வெளியிட்டு இருப்பாரோ என்ற சந்தேகம் இருந்திருக்கிறது. மேலும் இதனால் மாதம்பட்டி ரங்கராஜை சமூக வலைத்தளங்களில் மோசமாக விமர்சித்து வருகிறார்கள்.