பிரம்மாண்ட இயக்குனர் மணிரத்தினம் பொருத்தவரையில் மிகவும் அதிகமாக எந்த பேட்டியில் பேசியது இல்லை. எப்போதுமே தனது வேலையில் மிகவும் கவனமாக இருக்கக்கூடியவர். அதேபோல் அவரது படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
சமீபத்தில் கூட மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் படம் வெளியாகி வசூலை வாரிக் குவித்தது. அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் இப்படத்தின் இரண்டாம் பாகம் ரிலீஸ் ஆக உள்ளது. இந்நிலையில் மணிரத்தினத்தை பற்றி எல்லோருமே நல்ல விதமாகத்தான் சொல்லி உள்ளார்கள்.
ஆனால் அவர் ஒரு மோசமான வேலையை செய்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. அதாவது மௌன குரு படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சாந்தகுமார். மிக நல்ல இயக்குனரான இவருக்கு தற்போது வரை சரியான வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை.
இப்போது தான் ஒரு பெரிய இடைவெளிக்கு பிறகு ஒரு படத்தை இயக்கி வருகிறார். அந்த படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானல் சுற்றியுள்ள பகுதியில் நடத்தப்பட்ட வந்ததாம். இதற்கு அருகில் தான் மணிரத்தினத்தின் கெஸ்ட் ஹவுஸ் உள்ளதாம். அடிக்கடி மணிரத்தினம் அங்கு சென்று வருவாராம்.
இந்நிலையில் சாந்தகுமார் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போது மணிரத்தினம் தனது கெஸ்ட் ஹவுஸ்க்கு வந்துள்ளார். இது அவர்களுக்கு தெரியாமல் படப்பிடிப்பு நடத்தும் போது மணிரத்தினம் வீட்டின் மீது படப்பிடிப்பின் லைட்டிங் வெளிச்சம் விழுந்துள்ளது.
இது பற்றி அவர்களிடம் எந்த கேள்வியும் கேட்காமல் போலீசுக்கு போன் செய்து என்னை தொந்தரவு செய்கிறார்கள், அவர்களை விரட்டி அடியுங்கள் என்று கூறியுள்ளார். போலீசாரும் அங்கு வந்து படப்பிடிப்பு நடத்தக் கூடாது என கடத்த நிறுத்தி உள்ளனர். சினிமாவில் உள்ள பல இயக்குனர்களுக்கு முன்னோடியாக உள்ளவர் மணிரத்தினம். இவரே அவர்களுடன் நேரடியாக பேசாமல் போலீசுக்கு போன் பண்ணியது அநாகரிகமாக இருக்கிறது என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.