அப்படி ஒரு கேவலமான காட்சியில் நடிக்க மறுத்த சதா.. கட்டாயப்படுத்தி காரியத்தை சாதித்த இயக்குனர்

Actress Sada: நடிக்க வந்த வேகத்திலேயே அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்த சதா கடந்த சில வருடங்களாக சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார். தற்போது மீண்டும் தெலுங்கில் ரீ என்ட்ரி கொடுத்துள்ள இவர் தன்னை இயக்குனர் ஒருவர் கேவலமான காட்சியில் நடிக்க கட்டாயப்படுத்தியதை ஓப்பனாக கூறி இருக்கிறார்.

அறிமுக படத்திலேயே மிகப்பெரும் புகழை அடைவது பல நடிகைகளுக்கு எட்டாக்கனியாக தான் இருக்கிறது. ஆனால் சதா “போய்யா போ” என்ற ஒரே வசனத்தால் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார். அப்படி ஒரு அடையாளத்தை தேடிக்கொடுத்த ஜெயம் படத்தில் வரும் ஒரு காட்சியில் நடிக்க இவர் மிகவும் தயங்கி இருக்கிறார்.

அதாவது வில்லன் கோபிசந்த் இவருடைய கன்னத்தை நாக்கால் நக்குவது போன்ற ஒரு காட்சி படத்தில் இருக்கும். அதில் நடிப்பதற்கு சதா மறுப்பு தெரிவித்து இருக்கிறார். ஆனால் இயக்குனர் இது முக்கியமான காட்சி அதனால் தவிர்க்க முடியாது என்று ஸ்ட்ரிக்ட்டாக சொல்லிவிட்டாராம்.

கெஞ்சி கதறியும் அவர் மனம் இறங்காததால் வேறு வழியில்லாமல் சதா அந்த காட்சியில் நடித்திருக்கிறார். ஆனால் அதன் பிறகு வீட்டுக்கு சென்று அவர் அழுது தீர்த்தாராம். அந்த அளவுக்கு அவர் அப்படி நடித்ததற்காக வேதனை பட்டதாக தற்போது வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

அது மட்டுமல்லாமல் வீட்டிற்கு சென்று முகத்தை பலமுறை கழுவிக் கொண்டே இருந்ததாகவும், இப்போதும் கூட டிவியில் அந்த காட்சியை பார்த்தால் உடனே எழுந்து சென்று விடுவேன் எனவும் கூறியுள்ளார். அவருடைய இந்த வருத்தமான பதிவு தான் வைரலாகி வருகிறது.

இப்படி வருத்தப்படும் சதா தான் டார்ச்லைட் படத்தில் அந்தரங்க தொழிலாளியாக நடித்திருந்தார். இதை பற்றி கூறும் ரசிகர்கள் சினிமா என்று வந்துவிட்டால் இதெல்லாம் கடந்து தான் வரவேண்டும். பல நடிகைகள் இதைவிட மோசமான காட்சிகளில் தைரியத்துடன் நடித்திருக்கிறார்கள் என கமெண்ட் கொடுத்து வருகின்றனர்.