Tamil Director: தமிழ் சினிமாவிற்கு கரடு முரடான கதைக்களத்தை கொண்ட படங்களை கொடுக்கக் கூடியவர் தான் இயக்குனர் பாலா. இவர் மற்ற இயக்குனர்களை காட்டிலும் கொஞ்சம் முரட்டுத்தனம் மிக்கவர். இவருடைய படங்களில் நடிக்க வேண்டும் என்றால் நடிகர் நடிகைகளுக்கு கொஞ்சம் தைரியம் அதிகமாகவே வேண்டும்.
ஏனென்றால் தத்துவமாக காட்சிகளை எடுக்கிறேன் என்ற பெயரில் வேலை செய்யும் ஆட்களை நொந்து நூடுல்ஸ் ஆகும் வரை பிதுக்கி எடுத்து விடுவார். இப்பொழுது இவரைப் போலவே உருவெடுத்து அடுத்த பாலா என பெயர் வாங்கி வருகிறார். அதிலும் இந்த இயக்குனர் உதவி இயக்குனர்களை வறுத்தெடுத்துக் கொண்டிருக்கிறார்.
சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வடிவேலு குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து அசத்திய மாமன்னன் படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் தான் அந்த இயக்குனர். இவர் சாஃப்டான இயக்குனர் ராம் இடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து தற்போது சாதி ஏற்றத்தாழ்வுகளை அறுத்தெரியக்கூடிய படங்களை தொடர்ந்து இயக்கிக் கொண்டிருக்கிறார்
மாமன்னன் படம் மட்டுமல்ல அதற்கு முன்பு இவர் இயக்கிய பரியேறும் பெருமாள், கர்ணன் போன்ற படங்களிலும் சாதி ஏற்ற தாழ்வுகளை அழுத்தமாக பேசினார். இவரிடமும் பணி புரிவது மிகவும் கஷ்டம். அதுவும் இவரிடம் அசிஸ்டன்ட் டைரக்டர்களாக இருப்பவர்களின் கெதி, அதோ கெதி தான்.
ஏனென்றால் மாரி செல்வராஜ் உதவி இயக்குனர்கள் மீது பாசம் பரிவு காட்ட மாட்டாராம், கோபம் வந்தால் அடித்து விடுவாராம். அதேபோல் அரைக்கால் ட்ரவுசர் தான் போட வேண்டும் என்று கூறுவாராம். அவர் மனதில் நினைப்பதை உதவி இயக்குனர்கள் செய்து முடித்தாக வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்.
உதவி இயக்குனர்களை மட்டுமல்ல படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகளை பள பளன்னு காட்ட மாட்டார். அவருடைய கதை களத்திற்கு ஏற்றவாறு கருகருன்னு தான் இருக்கணும் என்று நினைப்பார். இதற்காக, வேண்டும் என்றே சக ஆர்டிஸ்ட் களை வெயிலில் நிக்க வைத்து நீங்கள் கொஞ்சம் கருப்பாக இந்த காட்சிக்கு தோன்ற வேண்டுமென்று கொடுமைப்படுத்துவாராம்.