Actress Simran: சிம்ரனின் எதார்த்தமான நடிப்புக்கும், டான்ஸ்க்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் இவரை தூக்கி வைத்து கொண்டாடி கனவு கன்னியாகக பார்த்து வந்தார்கள். அந்த வகையில் பல நடிகர்களுக்கும் மிகவும் பிடித்தமான நடிகையாக வலம் வந்தார். அப்படிப்பட்ட இவருக்கு நடிப்பு வரலைன்னு இயக்குனர் ஒருவர் கோபத்தின் உச்சக்கட்டத்திற்கு சென்று இருக்கிறார்.
அதாவது அந்த இயக்குனருக்கு நடிப்பு அவர் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் அளவிற்கு நடிகர்கள் நடிகைகள் நடித்தாக வேண்டும். அப்படி இல்லை என்றால் ரொம்பவே கோபத்துடன் படப்பிடிப்பு நேரத்தில் நடந்து கொள்வாராம். அந்த வகையில் சிம்ரன் நடித்த ஒரு சீன் இவருக்கு திருப்தி அளிக்காததால் பல டேக்குகள் வாங்கி இருக்கிறார்.
ஆனாலும் அந்த இயக்குனர் எதிர்பார்த்த படி சிம்ரன் இடமிருந்து தத்ரூபமான நடிப்பு வராததால் பெரிய நடிகை என்று கூட பார்க்காமல் கோபத்தை காட்டி இருக்கிறார். அந்த இயக்குனர் வேறு யாருமில்லை தற்போது நடிப்பு அரக்கனாக பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் எஸ்ஜே சூர்யா தான். அதாவது நியூ படத்தில் இயக்குனராக இருந்தவர் தான் எஸ்.ஜே. சூர்யா. ஆரம்பத்தில் இதில் நடிப்பதற்கு அஜித்,ஜோதிகா தான் கமிட் ஆகி இருந்தார்கள்.
ஆனால் அவர்கள் நடிக்காமல் போனதால் ஹீரோவாக எஸ்.ஜே. சூர்யா களமிறங்கினார். அத்துடன் ஜோதிகாக்கு பதிலாக சிம்ரன் நடித்தார். முதலில் சிம்ரன் நடிக்க ரொம்பவே தயக்கம் காட்டியிருக்கிறார். அதற்கு காரணம் எஸ்.ஜே. சூர்யா ஹீரோவாக அறிமுகமாகும் முதல் படம் என்பதால். ஆனால் அதன் பின் இவர் பெரிய இயக்குனர் அதனால் படம் கண்டிப்பாக நன்றாக ஓடும் என்ற நம்பிக்கையில் சிம்ரன் நடிப்பதற்கு சம்மதத்தை கொடுத்து விட்டார்.
பொதுவாக சிம்ரன் உடைய நடிப்பு எந்த அளவிற்கு இருக்கும் என்று அனைவருக்கும் தெரிந்த விஷயமே. அப்படிப்பட்ட இவர் சரியாக நடிக்காததால் எஸ்.ஜே. சூர்யா இவரிடம் கடுப்பாகி, அந்த சீனை திரும்பத் திரும்ப செய்ய சொல்லி கேட்டிருக்கிறார். கடைசி வரை சிம்ரன் சரியாக செய்யாததால் கோபத்தில் செல்போனை தூக்கி எறிந்து இருக்கிறார். இதனால் சிம்ரன் ரொம்பவே அசிங்கப்பட்டு படப்பிடிப்பு தளத்திலிருந்து வெளியே போயிருக்கிறார்.
அப்பொழுது இவரை அழைப்பதற்கு எஸ்.ஜே. சூர்யா வின் உதவி இயக்குனர் தான் கெஞ்சி கூத்தாடி திரும்ப கூப்பிட்டு வந்து நடிக்க வைத்திருக்கிறார். அதாவது எஸ்.ஜே. சூர்யாவை பொருத்தவரை நடிப்பு ரொம்பவே பெர்பெக்சன் ஆக இருக்கணும் என்று எதிர்பார்க்கக் கூடியவர். அப்படி இவர் எதிர்பார்த்ததினால் தான் தற்போது பல முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பு அரக்கனாக நடித்து ரசிகர்களின் கைதட்டல்களை வாங்கிக் கொண்டு வருகிறார்.