அஜித்துக்கு பின் பிரதீப்பை ஏமாற்றி வரும் இயக்குனர்.. தயாரிப்பாளரை காக்க வைத்த சம்பவம்

துணிவு படத்திற்கு பிறகு அஜித் விடாமுயற்சியில் நடிக்க ஆயத்தமாகி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி உள்ள நிலையில் அடுத்த வருடம் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் மக்கள் இருந்து வருகின்றனர். இந்நிலையில் அஜித்திற்கு வந்த நிலை வேறு ஒருவருக்கும் ஏற்பட்டுள்ளது என தகவல் வெளியாகி முணுமுணுக்க வைத்து வருகிறது.

சிறந்த இயக்குனர், தயாரிப்பாளர், கதை ஆசிரியர் என்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர் தான் விக்னேஷ் சிவன். ஏகே 62 அஜித் நடிப்பில் இவரின் இயக்கத்தில் வெளியாகும் என்ற எதிர்பார்த்து இருந்த நிலையில் இவர் அந்த படத்தில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். இவரிடம் அஜித் கதை சொல்ல போதிய நேரம் கொடுத்தும் கதை சொல்லாமல் இழுத்து வந்திருக்கிறார்.

அதன் பின் வெறுப்படைந்த அஜித் இப்படத்தில் இருந்து அவரை நிராகரித்தார். இதனால் வருத்தமடைந்த விக்னேஷ் சிவனுக்கு ஆறுதலாக ஏ ஜி எஸ் நிறுவனம் மற்றும் பிரதீப் ரங்கநாதனும் இணைந்து படம் ஒன்று உருவாக்கப் போவதாக பேச்சுவார்த்தை இருந்தது. இதன் மூலம் அவர் பழைய நினைவுகளில் இருந்து மீண்டு வருவார் என பலரும் எதிர்பார்த்தனர்.

ஆனாலும் விக்னேஷ் சிவன் பிரதீப் ரங்கநாதனுக்கு இன்றுவரை கதை சொல்லவே இல்லையாம். மேலும் பிரதீப் இவரிடம் கதையை முன்கூட்டியே சொல்லி விடுங்கள். அப்பொழுது தான் நான் அதற்கு தயாராக முடியும் என கூறியிருக்கிறார். ஆனாலும் அவர் இன்று வரை அவருக்கு கதை சொல்லவே இல்லையாம்.

அது மட்டும் இன்றி இவர் பிரதீப் ரங்கநாதனை சமாளித்து கேன்ஸ் ஃபிலிம்ஸ் ஃபெஸ்டிவலுக்கு கூட்டி சென்று விட்டாராம். இப்படத்தை நம்பி இருந்த தயாரிப்பாளர் வெகு நாளாக இவர்களுக்காக காத்து வருகின்றனர். ஆனால் அதற்கான பலன் தான் கிடைக்கவில்லை. இதைத் தொடர்ந்து பிரதீப்பும் இவருடன் சுற்றுவதால் இவரை நம்பி உள்ள தயாரிப்பாளர்களுக்கும் விக்னேஷ் கதை சொல்லவில்லையாம்.

இது போன்று அவர்கள் இருவரும் ஒரே குரூப் ஆக கிடைத்த வாய்ப்பை தவற விட்டுவிட்டு பொறுப்பில்லாமல் சுற்றி வருகின்றனர். தற்போது திரையுலகினர் இவர்களின் நடத்தையை கண்டு கேலி, கிண்டல் செய்து வருகின்றனர். இவர்களின் இத்தகைய செயல் தயாரிப்பாளர்களை மிகவும் வேதனைப்பட செய்து வருகிறது. விரைவில் இதற்கான ஒரு முடிவை எடுக்கவும் அவர்கள் ஆலோசித்து வருகிறார்கள்.