அஜித் படத்தை எப்படியாவது ஒரு முறையாவது இயக்கி விட வேண்டும் என்று தான் பல இயக்குனர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அதுவும் அஜித்துக்கு ஒரு இயக்குனர் பிடித்துப் போய்விட்டால் அடுத்த இரண்டு, மூன்று படங்களுக்கு தொடர்ந்து அவருக்கு வாய்ப்பு கொடுத்து வருவார். அப்படிதான் வினோத்துக்கு நேர்கொண்ட பார்வை, வலிமை மற்றும் துணிவு என அடுத்தடுத்த பட வாய்ப்புகளை வழங்கினார்.
இப்போது தான் வினோத் கூட்டணியில் இருந்து விலகி விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏகே 62 படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்நிலையில் அஜித்தின் தீவிர ரசிகரான ஒருவர் அவரின் படத்தை இயக்க வேண்டும் என்று 8 வருடங்களாக காத்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் அதை வெளிப்படுத்தி உள்ளார்.
அதாவது மலையாள சினிமாவில் எடுக்கப்பட்ட பிரேமம் படம் எல்லா மொழி ரசிகர்களையும் கவர்ந்திழித்தது. இந்த படத்தை இயக்கியவர் அல்போன்ஸ் புத்திரன். சமீபத்தில் நயன்தாரா நடிப்பில் உருவான கோல்டு படத்தை அல்போன்ஸ் இயக்கியிருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய அல்போன்ஸ் புத்திரனிடம் அஜித் படத்தை எப்போது இயக்குவீர்கள் என கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர் நான் அஜித்தின் மிகவும் தீவிரமான ரசிகன். அஜித்தை சந்திக்க 8 வருடமாக அவரது மேனேஜர் சுரேஷ் சந்திராவை நான் தொடர்பு கொண்டு வருகிறேன்.
ஆனால் இதுவரை தனக்கு வாய்ப்பு கிடைத்த பாடு இல்லை. மேலும் பிரேமம் படத்தை பார்த்துவிட்டு அஜித் சார் நிவின் பாலிக்கு ஃபோன் செய்து பாராட்டி இருக்கிறார். ஆனால் தனக்கு ஃபோன் செய்யவில்லையே என்று அப்போது எனக்கு மிகவும் பொறாமையாக இருந்ததாக அந்த பேட்டியில் அல்போன்ஸ் கூறியுள்ளார்.
மேலும் என் வாழ்நாளில் அஜித்தை வைத்து எப்படியாவது ஒரு படத்தை எடுக்க வாய்ப்பு கிடைக்க வேண்டும். அப்படி கிடைத்தால் கண்டிப்பாக 100 நாட்கள் மேல் ஓடும் அளவிற்கு ஒரு தரமான மாஸ் ஹிட் படத்தை கொடுப்பேன் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாக கூறியுள்ளார். இந்த விஷயம் கண்டிப்பாக அஜித் காதுக்கு சென்றால் அல்போன்ஸுக்கு வாய்ப்பு கொடுப்பார் என அவரது ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.