பழிக்குப் பழி வாங்கிய இயக்குனர்.. இன்று வரை ஜெயிக்க முடியாமல் தவிக்கும் துருவ் விக்ரம்

தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக்கான ஆதித்ய வர்மா படம் மூலம் நாயகனாக அறிமுகமானவர் துருவ் விக்ரம். இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விக்ரமின் மகன் ஆவார். ஆனால் துருவ் விக்ரம் இன்று வரை ஜெயிக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் நடிகராகவே பார்க்கப்படுகிறார்.

இதற்கெல்லாம் முன்னணி இயக்குனர் ஒருவர், விக்ரமின் மீது இருக்கும் கோபத்தை மகனை வைத்து பழி தீர்த்துக் கொண்டதாகவும் சொல்லப்படுகிறது. அதாவது விக்ரம் மீது உள்ள கோபத்தில் அவரது மகன் நடித்த முதல் படமான ஆதித்யா வர்மாவை ஆபாச படமாக எடுத்தார் பாலா.

தெலுங்கு படம் அர்ஜுன் ரெட்டி சம்பந்தமே இல்லாமல் மோசமாக படத்தை எடுத்து முடித்தார் பாலா. படத்தை தயாரிப்பாளரும், விக்ரம் பார்த்து பாதியிலேயே வெளியேறி இந்த படத்தை வெளியிடக்கூடாது என்று பாலாவிற்கு கட்டளையிட்டனர். ஏனென்றால் அந்த படம் படுக்கவச்சியாகவும், பெண்களும் வெறுக்கக் கூடிய காட்சிகள் பல இருந்ததால் முதல் படத்திலேயே மகனுக்கு மோசமான விமர்சனம் கிடைத்துவிடும் என விக்ரம் பயந்தார்.

இதனால் இந்த படத்தை வெளியிடக்கூடாது என பாலாவிடம் விக்ரம் ஸ்ட்ரிக்ட் ஆக சொல்லி இருந்தாராம். அப்போது விக்ரம் மீது உள்ள கோபத்தை அவரது மகன் மீது காட்டி படத்தை மிக மோசமாக எடுத்து இன்று வரை தமிழ் சினிமாவில் முன்னேற முடியாமல் பெயரை கெடுத்து விட்டார் பாலா.

விக்ரம் பாலாவிற்கு பிரச்சனை இருந்துள்ளது. அத்துடன் விக்ரம் வளர்ந்த பிறகு பாலாவை மதிக்காததால், பாலா விக்ரம் மகனை பழி வாங்கி விட்டார். இதெல்லாம் சினிமாவில் சகஜம் தான் என விக்ரம் தன்னுடைய மகனுக்கு தோலுக்குத் தோளாக நின்று மகான் படத்தின் மூலம் ஹிட் கொடுக்க வேண்டும் என நினைத்தார்.

ஆனால் தந்தை விக்ரமுடன் இணைந்து நடித்த மகான் படமும் படு தோல்வியை தந்தது. இருப்பினும் மனம் தளராத துருவ் விக்ரம் தந்தையின் அறிவுரையின் பேரில் அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி முன்னணி நடிகராக வலம் வர பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

ஆனால் சினிமாவில் வளர வேண்டும் என துடித்துக் கொண்டிருந்த இளம் நடிகருக்கு சரியான பாதையை காட்டாமல் காலை வாரிவிட்டு பழிக்குப் பழி வாங்கிய பாலாவின் கீழ்த்தரமான செயல் தற்போது வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது.