ஹீரோ அவதாரம் எடுக்கும் லோகேஷ்.. இயக்குனர் யார் தெரியுமா.?

Lokesh Kanagaraj : இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது ரஜினியின் கூலி படத்தை இயக்கி வருகிறார். சமீபத்தில் இந்த படத்தின் வீடியோ வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அடுத்ததாக லோகேஷ் கதாநாயகனாக நடிக்க உள்ளார். ஏற்கனவே ஸ்ருதிஹாசன் உடன் ஒரு பாடலில் நடித்த இருந்தது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. இப்போது ஹீரோ அவதாரம் எடுத்தது பலரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

லோகேஷ் ஒரு சிறந்த இயக்குனர். கைதி, விக்ரம், மாஸ்டர் என பல ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார். அவரை ஒரு இயக்குனர் இயக்குகிறார் என்றால் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது.

லோகேஷை இயக்கப் போகும் இயக்குனர்

அந்த வகையில் செல்வராகவனின் சாணி காகிதம், தனுஷின் கேப்டன் மில்லர் படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் லோகேஷின் முதல் படத்தை இயக்க உள்ளார். மேலும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது.

சற்றும் எதிர்பார்க்காத இந்த கூட்டணி கண்டிப்பாக வேற லெவலில் இருக்கும். மேலும் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் விரைவில் வெளியிட இருக்கிறது.

அதோடு இப்போது லோகேஷ் கூலி படவேலையில் பிஸியாக இருக்கிறார். அந்த படப்பிடிப்பை முடித்த பிறகு அருண் மாதேஸ்வரன் படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கலாம்.