தி ஃபேமிலி மேன் மூன்றாம் பாகத்தில் நடிக்கப் போகும் விஜய் சேதுபதி.. அட்டகாசமான அப்டேட்!

பல சர்ச்சைகளை சந்தித்து தி ஃபேமிலி மேன் 2 அமேசான் பிரைமில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் தி ஃபேமிலி மேன் மூன்றாம் பாகம் எடுக்கப்போவதாக இயக்குனர் ராஜ் மற்றும் டீகேவும், நடிகர் மனோஜ் பாஜ்பாயும் முடிவெடுத்துள்ளனர்.

இரண்டாம் பாகத்தின் முடிவில் சீனாவிலிருந்து வைரஸ் ஒன்றை இந்தியாவிற்குள் அனுப்புவது போன்றும், அதை தடுத்து நிறுத்த போன்றும் கதையம்சம் உள்ளதாம். மூன்றாம் பாகம் முழுக்க முழுக்க சென்னையில் எடுக்க உள்ளதாகவும்.

இதில் நடிப்பதற்காக விஜய் சேதுபதி சந்தித்து பேசி உள்ளனர். ஏற்கனவே இரண்டாம் பாகத்தில் இலங்கை போராளி குழு தலைவர் பாஸ்கரனாக நடிப்பதற்கு விஜய் சேதுபதி அணுகியதாகவும் அவர் நடிக்க மறுத்துவிட்டாராம்.

அவர் தான் மைம்கோபியை சிபாரிசு செய்வதாகவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறில் நடிக்க மறுத்தார் விஜய் சேதுபதி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தி ஃபேமிலி மேன் அடுத்த சீசனில் நடிக்க விஜய் சேதுபதிக்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. ஆனால் மூன்றாம் பாகத்தில் நடிப்பதற்கு விஜய் சேதுபதி  தரப்பில் எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் தற்போது வரை வெளிவரவில்லை.

கிட்டத்தட்ட 10 எபிசோடுகள் உள்ள 3ம் பாகத்தில் நடிப்பதற்காக விஜய் சேதுபதியின் கதாபாத்திரத்திற்கு ஏற்ற மாதிரி சம்பளம் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

dam999 the family man
dam999 the family man