ஜெய் கதாபாத்திரத்தில் நடிக்க இருந்த பிரபல நடிகர்.. தயாரிப்பாளர் செய்த சூழ்ச்சி

தளபதி விஜயின் பகவதி படத்தில் அவருக்கு தம்பியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான நடிகர் ஜெய், அதைத்தொடர்ந்து சுப்பிரமணியபுரம், சரோஜா போன்ற பல படங்களில் கதாநாயகனாக தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார்.

அப்படி இவர் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் இரண்டு பாகங்களாக வெளியான சென்னை 600028 திரைப்படமானது வசூல் ரீதியாகவும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்தப்படத்தில் முதலில் ஜெய் கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தது வைபவ் தானாம்.

சென்னை 600028 படத்திற்கான ஆடிஷன் எல்லாம் முடிந்த பிறகு படத்தின் தயாரிப்பாளர் எஸ்பிபி சரண் அவர்கள், வைபவ் அந்தக் கதாபாத்திரத்தில் வேண்டாம் என்று மறுத்துவிட்டாராம். அவருக்கு பதில் ஜெய் நடிக்க வேண்டும் என்று சொல்லிவிட்டார்.

ஏனென்றால் ஜெய் அவருக்கு ரொம்ப பிடிக்குமாம். சிறுவயதிலிருந்து நண்பர்களாம். அதனால் வைபவ் வேண்டாம் என்று ஒரே பிடியாய் நின்றுவிட்டார். இதனால் ஜெய், சென்னை 600028 படத்தில் ரகு என்ற முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் வைபவ், மருதுபாண்டி என்ற எதிர்மறை தோற்றத்தில் நடித்திருப்பார். இவர்களுடன் சிவா, பிரேம்ஜி அமரன், அரவிந்த் ஆகாஷ், விஜய் வசந்த், நித்தின் சத்யா உள்ளிட்டோர் இணைந்து இளைஞர் பட்டாளமாகவே நடித்து கலக்கி இருப்பார்கள்.

இருப்பினும் வைபவ் கதாநாயகனாக நடிக்க இருந்த கதாபாத்திரம் தயாரிப்பாளர் செய்த சூழ்ச்சியால் அது ஜெய்க்கு கிடைத்திருக்கிறது. இருந்தபோதிலும் இயக்குனர் வெங்கட் பிரபு  இரண்டாம் பாகத்தில் வைபவ்வை நடிக்க வைத்து அழகு பார்த்திருக்கிறார்.