பொதுவாக சினிமாவில் ஒரு சில படங்களில் ஒரே ஜோடி இணைந்து நடித்தால் அவர்களைப் பற்றி கிசுகிசுக்கள் வெளியாகிறது. சில சமயங்களில் இவர்கள் காதலித்து கல்யாணம் வரை செய்து கொள்கிறார்கள். அவ்வாறு தான் அஜித் ஷாலினி, சூர்யா ஜோதிகா ஜோடிகள் திருமணத்தில் இணைந்துள்ளனர்.
ஆனால் இதில் ஒரு தலை காதலும் நிறைய இருக்கிறது. அப்படி ரம்மி நடிகர் ஒரு நடிகையை சுற்றி சுற்றி வந்துள்ளார். அதாவது கட்டுமஸ்தான உடல் அமைப்பு கொண்ட சரத்குமார் பின்னால் நிறைய நடிகைகள் சுற்றி வந்துள்ளனர். ஆனால் அவருக்கு ஒரு நடிகை மீது கிரஷ் இருந்துள்ளது.
சரத்குமார் உடன் சூரிய வம்சம், மூவேந்தர் போன்ற படங்களில் ஜோடி போட்டு நடித்தவர் நடிகை தேவயானி. பெரும்பாலும் குடும்ப பங்கான கதாபாத்திரத்தை தான் தேர்ந்தெடுத்து தேவயானி நடித்து வந்தார். தேவயானி சரத்குமாருக்கு ரொம்ப பிடித்ததால் அவர் வீட்டுக்கு பெண் கேட்டு சென்றுள்ளார்.
ஆனால் தேவயானி குடும்பத்தில் இதற்கு சம்மதம் தெரிவிக்க வில்லையாம். அதே நேரத்தில் சூரியவம்சம் படத்தில் அசிஸ்டன்ட் டைரக்டராக வேலை பார்த்தவர் ராஜகுமாரன். இவர் தேவயானியின் நீ வருவாயா என படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.
அதன் பிறகு விக்ரம், தேவயானி நடிப்பில் உருவான விண்ணுக்கும் மண்ணுக்கும் படத்தை இயக்கியிருந்தார். அந்த சமயத்தில் ராஜகுமாரன் மீது காதல் வலையில் விழுந்துள்ளார் தேவயானி. இவர்கள் இருவரும் 2001 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் யாருக்கும் தெரியாமல் திருத்தணி முருகன் கோயிலில் திருமணம் செய்து கொண்டார்கள்.
இந்தச் செய்தி செய்தித்தாள்களில் வெளியான உடன் கோலிவுட் சினிமாவே அதிர்ச்சியில் உறைந்தது. தேவயானி இவரை திருமணம் செய்து கொண்டாரா என ரசிகர்கள் வாயை பிளந்தனர். ஆனாலும் காதலுக்கு அழகு முக்கியம் இல்லை என்பதை நிரூபித்து தற்போது வரை சந்தோசமாக வாழ்க்கை நடத்தி வருகிறார்கள்.