சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். நேற்று இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தது. ரஜினி மிகவும் ஸ்டைலாக இளமையுடன் இருந்த காட்சியை பார்த்து ரசிகர்கள் குஷி ஆகிவிட்டனர்.
அடுத்ததாக ஜெய் பீம் இயக்குனருடன் ரஜினி கூட்டணி போட இருக்கிறார். லைக்கா இந்த படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்க இருக்கிறது. இந்நிலையில் ரஜினியே முன்வந்து லோகேஷை தன்னுடைய படத்தை இயக்குமாறு கேட்டுக் கொண்டார். அதுவும் தன்னுடைய கடைசி படத்தை லோகேஷ் இயக்க வேண்டும் என்பது ரஜினியின் நிலைப்பாடு.
ஆகையால் தலைவர் 173 படத்தை லோகேஷ் இயக்க இருக்கிறார். மேலும் இந்த படத்தை எப்படியாவது தயாரிக்க வேண்டும் என முன்னணி நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு இருந்தது. அந்த வகையில் சன் பிக்சர்ஸ், லைக்கா போன்ற பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனங்களும் இந்த லிஸ்டில் இருந்தது.
ஆனால் ரஜினி நன்றி மறவாமல் ஒரு முக்கிய முடிவு எடுத்துள்ளார். அதாவது தன்னை வாழ வைத்த ஏவிஎம் ஸ்டுடியோவுக்கு தனது 173 ஆவது படத்தை ரஜினி கொடுத்துள்ளார். அதுவும் எஸ் பி முத்துராமன் இயக்கத்தில் ஏவிஎம் தயாரிப்பில் ரஜினி பல ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார்.
அந்த வகையில் முரட்டுக்காளை, போக்கிரி ராஜா, பாயும் புலி, நல்லவனுக்கு நல்லவன் போன்ற படங்களும் அடங்கும். இந்த படங்கள் எல்லாம் ரஜினியின் சினிமா கேரியர் வளர்ச்சிக்கு முக்கியமாக அமைந்த படங்கள். இப்படி தன்னை ஏற்றி விட்டவர்களுக்கு நன்றி கடனாக ரஜினி இந்த காரியத்தை செய்துள்ளார். இதன் மூலம் முடங்கி கிடந்த ஏவிஎம் நிறுவனம் மீண்டும் விஸ்வரூபம் எடுக்க இருக்கிறது.
ஏவிஎம் ஸ்டுடியோவுக்கு தனது 173 ஆவது படத்தை ரஜினி கொடுத்துள்ளார்
