டோலிவுட்டில் அதிரடி ஆக்ஷன் நாயகனாக அசத்தியவர் பிரபாஸ். பாகுபலி இவரின் இமேஜ்ஜை மாற்றியது. இந்நிலையில் இவரது நடிப்பில் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் ஆதிபுருஷ் திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்தப் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே இந்தப் படத்தை இயக்கிய ஓம் ராவத்துக்கு தயாரிப்பாளர் 4 கோடிக்கு சொகுசு கார் வாங்கி பரிசாக அளித்திருப்பது ஒட்டுமொத்த திரையுலகையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
எனவே படம் ரிலீசுக்கு முன்பே அந்தப்படத்தின் வெற்றியைக் கொண்டாட துவங்கியிருக்கும் ஆதிபுருஷ் படக்குழுவின் துணிச்சலை பலரும் வியந்து பார்க்கின்றனர். சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் ட்ரெண்ட் ஆனது.
500 கோடி பொருட்செலவில் பிரம்மாண்டமாக 3டி தொழில்நுட்பத்தில் ரெடியாகி இருக்கும் இந்தப் படம் பான் இந்தியா படமாக வெளியாகிறது. இதில் ராமராக பிரபாசும், ராவணனாக சைஃப் அலி கானும் நடிக்கிறார்கள். மிகப் பெரிய பொருட் செலவில், இதுவரை கண்டிராத பிரம்மாண்ட படைப்பாக இந்த படம் உருவாகி உள்ளது.
இந்திய சினிமாவில் விஃஎப்எக்ஸ் (VFX ) ஷாட்களை கொண்ட படமாக பாகுபலி ரெடியானது. அந்த சாதனையை இந்த ஆதிபுருஷ் முந்தப்போகிறது. பாகுபலி 2 படத்தில் அதிகபட்சமாக 2500 விஷுவல் எஃபெக்ட் ஷாட்கள் வைக்கப்பட்டிருந்தது. ஆதிபுருஷ் படத்தில் 8000 விஎஃப்எக்ஸ் ஷாட்கள் வைக்கப்பட்டுள்ளது என்கின்றனர்.
ஆகையால் ஆதிபுருஷ் படக்குழு புரோமோஷன் செய்வதைக் காட்டிலும், இப்போது இருந்தே தயாரிப்பு நிறுவனம் பரிசுப் பொருள்களை கோடிக்கணக்கில் வாரி இறைத்து பில்டப் காட்டத் துவங்கி விட்டனர். தோல்வி பயத்தில், இதை ஒரு டிரெண்ட் ஆக மாற்றி படத்திற்கான பிரமோஷன் ஆக தற்போது மாற்றி வருகின்றனர். இந்த படத்திற்கு பிறகு பிரபாஸ் மீண்டும் தன்னுடைய மார்க்கெட்டை பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.