அதிக வன்முறை ட்ரெண்டை உருவாக்கிய படம்.. பீஸ்ட், ஜெயிலருக்கு முன்பே குட்டிச்சுவர் ஆகிய இயக்குனர்

Beast-Jailer Movie: படத்தில் சுவாரஸியத்தை ஏற்படுத்த பல வழிகளை கையாளுகின்றனர் இயக்குனர்கள். தற்போதைய படங்களில், அதிகரித்து வரும்  வன்முறை காட்சிகள் சீசனாய் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது போன்ற சம்பவத்திற்கு, ட்ரெண்டை உருவாக்கிய படம் குறித்த தகவலை இத்தொகுப்பில் காணலாம்.

தமிழ் சினிமாவை பொறுத்தவரை ஒவ்வொரு காலத்திற்கும் ஒவ்வொரு ட்ரெண்டை பாலோ செய்து வெற்றி கண்டு வருகின்றனர். அவை பருவ கால சீசனை போல பார்க்கப்பட்டு வருகிறது. அவ்வாறு சமீபகாலமாக, விலங்குகளை வைத்து படம் எடுத்தால் அது போன்ற படங்களை தொடர்ந்து மேற்கொள்வதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்.

மேலும் அவை சென்றதும் உடனே ஹாரர், பேய் போன்ற சப்ஜெக்ட் படங்களை கைவசம் இறக்கி வருகின்றன. அதுவும் ஒன்றைப் பார்த்து ஒன்று கண்டினியூஸ் ஆக வந்து கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் தற்போது விஸ்வரூபம் எடுத்து வருவது வன்முறை படங்கள்.

ஒரு காலத்தில் வன்முறை காட்சிகள் சென்சார் போர்டில் தவிர்க்கப்பட்டு வந்த நிலையில், தற்பொழுது அதற்கும் ஒரு சில விதிமுறைகளை கொண்டு படங்களை வெளியிட்டு வருகின்றனர். இதற்கு வித்தாய் அமைந்த படம் தான் கே ஜி எஃப். 2018ல் கன்னட மொழி படமாய் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தில் ஆயுஷ் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்திருப்பார்.

கோலார் கோல்ட் மாஃபியா போன்ற கதை அம்சம் கொண்ட இப்படம் மக்களின் விமர்சனங்களை பெற்று வசூல் ரீதியாக சுமார் 250 கோடியை பெற்றது. இருப்பினும் இப்படத்தில் இடம் பெற்ற அதிரடி வன்முறை காட்சிகள், இளம் தலைமுறையினருக்கு எதிராய் அமைந்திருக்கும்.

அதற்கு பின் விஜய் நடிப்பில் பீஸ்ட், கமல் நடிப்பில் விக்ரம், ரஜினி நடிப்பில் ஜெயிலர் என பல படங்கள் அடுத்தடுத்து அதிக வன்முறை படங்களால் வந்து கொண்டிருக்கிறது. தலை துண்டாக்குவது, ரத்தம் தெரிப்பது போன்ற காட்சிகள், காண்போருக்கு பதப்பதைக்கும் விதமாய் அமைந்து வருகிறது.