எம்ஜிஆரை பெயர் சொல்லி அழைக்கும் ஒரே நடிகை.. சூட்டிங் ஸ்பாட்டிலே தெனாவட்டு காட்டும் ஹீரோயின்

The friendship between legendary Tamil actor MGR and Bhanumathi: இன்றைய சூழலில் சினிமாவில் உச்சம் அடைந்து விட்டால் நடிகர்களின் அடுத்த தேர்வு அரசியலாக இருக்கிறது. ஆனால் அரசியலில் உச்சம் வருவதற்கே சினிமா துறையை தேர்ந்தெடுத்தார் எம் ஜி ஆர். சிறுவயதிலிருந்தே சமூக சேவையை மூச்சென வாழ்ந்த எம்ஜிஆரை பற்றி கலைஞர் குறிப்பிடும்போது, “கதர் உடையில் கழுத்தில் சிறு பாசியுடன் நெஞ்சத்தில் நேர்மை மிக்க..” என்று எம்ஜிஆரின் தோற்றத்தை வடித்து இருப்பார் கலைஞர்.

“எதிரியும் போற்றும் வள்ளல், தூற்றுவாறையும் போற்ற வைத்த இந்த நாடோடி மன்னன்” எம்ஜிஆர் வாழ்ந்த காலம் தமிழகத்திற்கு பொற்காலமாக அமைந்தது என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

தமிழ் சினிமாவில்  அசைக்க முடியாத ஜாம்பவானான எம்.ஜி.ஆர், ராஜகுமாரி, மருதநாட்டு இளவரசி போன்ற படங்கள் வரும் வரை 15 படங்களுக்கு மேலாக சிறு வேடத்திலேயே நடித்தார்.

1948 வந்த வெளிவந்த ரத்தினகுமாரின் குமாரியில் பானுமதி நாயகியாக நடிக்க எம்ஜிஆர் சிறு வேடத்தில் தோன்றியிருந்தார். நல்ல குரல் வளம் மிக்க பானுமதி, படத்தின் பாடல்கள் தொடங்கி அனைத்தையும் மற்றவர்களுக்கு விட்டுக் கொடுக்காமல் தானே நடிப்பதில் வல்லவர்.

பல படங்களில் ஒன்றாக நடித்த இவர்களின் நட்பு நாளொரு வண்ணமாக வளர்ந்து வந்தது. எம்ஜிஆர் மற்றும் பானுமதி இவர்களின் படம் என்றாலே படப்பிடிப்பு அரங்கம் மொத்தமும் சைலன்டாக கப்சிப் என்று ஆகிவிடும்.

படப்பிடிப்பு தளத்தில் தயாரிப்பாளர்கள் முதல் அனைவரும் எம்ஜிஆரை மரியாதையுடன் நடத்தும் பொழுது, அவரை மிஸ்டர் எம் ஜி ராமச்சந்திரன் இங்கே வாருங்கள் என்று  உரிமையோடு அழைக்கக் கூடிய ஒரு நடிகை என்றால் அது பானுமதி மட்டும்தான். மேலும் எம்ஜிஆரை விட வயதில் மூத்தவர் பானுமதி தான் ஆனால் அவருக்கு கதாநாயகியாகவும் நடித்துள்ளார்.

நாடோடி மன்னனில் ஏற்பட்ட பிரச்சனையின் போது  நீங்கள் இயக்குவதாக இருந்தால் நான் படத்தில் நடிக்க மாட்டேன் என்று முகத்திற்கு நேராக கூறி வெளியேறிய போதும் பின்னாளில் தமிழக முதல்வரான போது, தமிழக இசை கல்லூரி உருவாக்கப்பட்ட போது பானுமதியை முதல்வராக நியமித்து அழகு பார்தார்.  இதை எதிர்பார்க்காத பானுமதி  எம்ஜிஆரிடம் நன்றி பெருக்கால் நெகிழ்ந்து போனார்.

திரைத் துறையிலும் அரசியலிலும் உச்சம் தொட்ட போதும் எனக்கென எதுவும் சேர்த்து வைத்துக் கொள்ளாது  தன் வாழ்நாளின் பெரும் பகுதி  மற்றவர்களின் நலனையே கருத்தில் கொண்டு உழைத்த இந்த தங்கத் தலைவர் எம் ஜி ஆரின் பிறந்தநாள் இன்று ஜனவரி 17.