அன்றிலிருந்து இன்று வரை ஹாலிவுட்டை கலக்கி வரும் ஒரே நடிகர் பிரெண்டன் ஃபிரேசர். யார் இந்த நடிகர் அப்படி இவர் என்ன படங்களில் நடித்திருக்கிறார் என்பதை பார்க்கலாம். இவர் 1991 ஆம் ஆண்டு டாப் ஃபைட் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆனார். இவர் ஹீரோவாக நடித்த இந்தப் படத்தின் மூலமே மிகவும் பிரபலமாகிவிட்டார்.
பின்பு 1999 ஆம் ஆண்டு வெளிவந்த மம்மி படத்தில் ஹீரோவாக நடித்தார். அதில் இவர் சும்மா இரண்டு துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு மம்மி என்ற பேய்களை சுட்டு வீழ்த்தும் செம ஸ்மார்ட்டான கதாபாத்திரத்தில் நடித்தார். இதனை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டு மற்றும் மூன்று பாகங்கள் வெளியாகி வந்து அதையும் சூப்பர் ஹிட் படங்களாக கொடுத்தார்.
மேலும் ஸ்டில் ப்ரீத்திங், தி மம்மி 1,2 மற்றும் 3, பிடேஸல்ட், இன்க் ஹார்ட், ஜிஐஜோ, எஸ்கேப் ஃப்ரம் பிளானட் எர்த், பிரேக் அவுட், தி நட் ஜாப் போன்ற படங்களில் நடித்து உலகளவில் பிரபலமான ஹீரோவாக இடம் பெற்றார். அத்துடன் சாக்லேட் பாயாகவும் ரசிகரின் மனதில் இடம் பிடித்தார். இவருடைய பெரிய ஆசையை ஆஸ்கார் விருதை தட்டி செல்ல வேண்டும் என்பதுதான்.
அதற்காக பல படங்களிலும் போராடி நடித்து விருது வாங்கும் அளவிற்கு இவரை தயார்படுத்திக் கொண்டு வந்தார். ஆனால் சில காரணங்களால் இவரால் அந்த விருதை கைப்பற்ற முடியவில்லை. பின்பு வெறிகொண்டு நடிக்க வேண்டும் என்ற மனதில் உறுதியுடன் இருந்தார். அதற்கான வாய்ப்பு தான் கடந்தாண்டு வெளிவந்த திரைப்படம் தி வேல்.
இந்த படத்தில் இவருடைய தோற்றம் எப்படி இருக்கும் என்றால் உடை எடை அதிகரித்த நபராகவும், பார்த்தவுடன் குண்டு பையா என கிண்டல் அடிக்கும் வகையில் தான் இவருடைய தோற்றத்தை மாற்றிக் கொண்டு நடித்திருப்பார். ஆனால் அதுவே இவருக்கு கை கொடுத்திருக்கிறது என்றே சொல்லலாம். மேலும் இதைப் பற்றி பலரும் பலவிதமாக கிண்டல் அடித்து வந்தார்கள். அதாவது மம்மி படத்தின் ஹீரோவா இப்படி ஆகிவிட்டார் என்று இவரைப் பற்றி ஏகப்பட்ட ட்ரோல்கள் வெளியாகி இருந்தது.
ஆனால் எதற்குமே அசராமல் இருந்தவர் தான் நம் மம்மி படத்தின் ஹீரோ. மேலும் இவரை கிண்டல் செய்தவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாகத்தான் இப்பொழுது இவர் கையில் கிடைத்திருப்பது விலை மதிக்க முடியாத ஆஸ்கார் விருது. இந்த விருதை கைப்பற்றிய பிறகு அவர் சொன்ன ஒரு விஷயம் லேட்டா கிடைத்தாலும் லேட்டஸ்டாக இந்த விருதை பெற்றிருக்கிறேன். என்று உணர்ச்சிப்பூர்வமாக மேடையில் பேசி ரசிகர்களை பிரமிக்க வைத்திருக்கிறார்.