Udhayanidhi Stalin : உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் படங்களை தயாரித்து வந்த நிலையில் இப்போது அதிகம் விநியோகம் செய்து வருகின்றனர். சமீபத்தில் வெளியான தக் லைஃப் படத்தை கமல், மணிரத்னம் ஆகியோருடன் இணைந்து உதயநிதியும் சேர்ந்து தயாரித்திருந்தது.
ஆனால் இப்படம் பெரிய அளவில் வசூல் செய்யவில்லை. இப்போது மீண்டும் படங்களை தயாரிப்பதில் ரெட் ஜெயண்ட் ஆர்வம் காட்டி வருகிறது. குறிப்பாக மாஸ் நடிகர் ஒருவரின் படத்தை தயாரிக்க நினைத்த நிலையில் அவர் மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
அதாவது விஜய்யின் படத்தை இப்போது உதயநிதியால் தயாரிக்க முடியாது. ஏனென்றால் விஜய் சினிமாவை விட்டு விலகுகிறார் என்பது ஒரு பக்கம் இருந்தாலும் தன்னுடைய கட்சிக்கு போட்டி திமுக என்று பல மேடைகளில் பேசி இருக்கிறார்.
ரெட் ஜெயண்ட் நிறுவனத்தில் நடிக்க மறுத்த ஹீரோ
இதனால் விஜய்க்கு இணையாக இப்போது சினிமாவில் ஹிட் படங்களை கொடுத்தவர் ரஜினி தான். ஆகையால் ரஜினி தன்னுடைய அடுத்த படத்திற்கு டேட் கொடுக்குமாறு உதயநிதி தரப்பிலிருந்து கேட்கப்பட்டிருக்கிறது.
ரஜினி இப்போது தான் கூலி படத்தில் நடித்து முடிந்த நிலையில் அடுத்ததாக ஜெயிலர் 2 படத்தில் நடிக்கிறார். இந்த சூழலில் உதயநிதி இடம் டேட் கொடுத்தால் இதை வைத்து அரசியலில் பெரிய தாக்கம் ஏற்படும். ஏனென்றால் வருகின்ற சட்டமன்றத் தேர்தல் 2026 இல் நடக்க உள்ளது.
ரஜினி இப்போது உதயநிதிக்கு படம் நடித்துக் கொடுத்தால் திமுகவுக்கு ஆதரவாக சூப்பர் ஸ்டார் இருப்பதாக சர்ச்சைகள் எழும். அதன் காரணமாக ஜெயிலர் 2 படத்தை முடித்த பிறகு ஆறு மாதத்திற்கு ஓய்வு எடுக்கப் போவதாக ரஜினி சொல்லி தப்பித்திருக்கிறார்.