கூல் சுரேஷ் கன்னம் பழுத்திருக்கும்.. பொளந்து கட்டிய தொகுப்பாளினி

Cool Suresh : கூல் சுரேஷ் ஒவ்வொரு திரைப்படம் வெளியாகும் போதும் புது கெட்டப்பில் படத்தை பார்க்க தியேட்டருக்கு வருவார். சிம்புவின் தீவிர ரசிகரான இவர் அடிக்கடி ஏதாவது சர்ச்சையில் சிக்கி இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறார்.

அவ்வாறு ஒரு பட விழாவில் தொகுப்பாளினி ஐஸ்வர்யா ரகுபதி கழுத்தில் மாலை போட முற்பட்டார். இது இணையத்தில் மிகப்பெரிய பேசு பொருளாக மாறியது. இந்நிலையில் சமீபத்தில் சாய் தன்ஷிகா நடிப்பில் உருவாகி இருக்கும் யோகி டா படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

இதில் ஐஸ்வர்யா ரகுபதி தனது ஆவேசத்தை கொட்டி தீர்த்தார். அதாவது ஒரு பட விழாவில் மூத்த பத்திரிக்கையாளர் ஐஸ்வர்யா அணிந்த உடையை விமர்சித்து கேள்வி கேட்டிருந்தார். அப்போது சபை நாகரிகம் கருதி எதுவும் பேசாமல் ஐஸ்வர்யா சென்று விட்டாராம்.

கூல் சுரேஷை பற்றி பேசிய தொகுப்பாளினி

அதன் பிறகு இந்த விஷயம் முகநூலில் பெரிய பூதாகரமாக வெடித்தது. பலரும் ஐஸ்வர்யாவுக்கு சப்போர்ட் செய்து வந்தனர். இப்போது பேசிய ஐஸ்வர்யா நான் மௌனமாக இருப்பதால் பலவீனமானவள் என்று நினைத்து கொள்கிறார்கள்.

அன்றே என் கழுத்தில் ஒரு நடிகர் அதாவது கூல் சுரேஷ் மாலை போட வந்த போது அவரின் கன்னத்தை பழுக்க வைத்திருக்க வேண்டும். அன்னைக்கே ஓங்கி அறைந்திருந்தால் இன்று மீண்டும் மீண்டும் என்னை விமர்சித்து செய்திகள் வந்திருக்காது என்று கூறினார்.

மேலும் தன்னுடைய ஆடை குறித்து பேசிய பத்திரிக்கையாளரையும் பதிலடி கொடுக்கும்படி பேசினார். இதனால் அங்கு இருந்த பத்திரிக்கையாளர்கள் நீங்கள் பேசுவது தவறு என்று கூறிய போது, அன்று என்னை அவர் பேசும் போது நீங்கள் ஏன் கேட்கவில்லை என்று ஐஸ்வர்யா வினவி இருந்தார். இதனால் அந்த படவிழாவில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டு இருந்தது.