Hot Spot Movie : திட்டம் இரண்டு மற்றும் அடியே படங்களை இயக்கிய விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஹாட் ஸ்பாட். இப்போது இந்த படத்தின் டிரைலர் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வெற்றிமாறன் படத்தை மிஞ்சும் அளவிற்கு கேடு கெட்ட வார்த்தையில் பல வசனங்கள் இடம்பெற்று இருக்கிறது. அதுவும் காது கொடுத்து கேட்க முடியாது அளவுக்கு உள்ளது. பீப் போடாமலே அந்த வார்த்தைகள் ஒலித்ததால் சென்சார் போர்டு இதற்கு எப்படி அனுமதி கொடுத்தது என்பதே சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
அதாவது கலையரசன், சோபியா, ஆதித்யா, கௌரி கிஷன், சாண்டி, அம்மு அபிராமி, சுபாஷ் மற்றும் ஜனனி ஐயர் ஆகியோர் நடித்துள்ளனர். இன்றைய இளைஞர்கள் எவ்வாறு சீரழிகிறார்கள் என்பதையும், அதன் மூலம் குழந்தைகளின் மனதிலும் ஆழமாக சில விஷயங்கள் பதியப்படுகிறது.
கேடு கெட்ட வார்த்தையில் வெளியான ஹாட் ஸ்பாட்
இதுவரை இதுபோன்ற பேசப்படாத கதையாக இருந்தாலும் டிரைலர் பார்ப்பதற்கே பயங்கரமாக இருக்கிறது. ஆனால் இதன் மூலம் சமூகத்திற்கு நல்ல தீர்வு கிடைக்கும் படியான ஒரு படத்தை கொடுக்கத்தான் இயக்குனர் இவ்வாறு எடுத்துள்ளார்.
மேலும் அழுத்தமான கதையாக இருந்தாலும் ட்ரெய்லரிலேயே சில காட்சிகளை தவிர்த்திருக்கலாம் என்று தான் யோசிக்க வைக்கிறது. அதோடு இயக்குனர் சொல்ல வந்த கருத்தை சரியாக மக்களுக்கு சென்றடைந்தால் படம் நிச்சயம் வெற்றி அடையும்.
அப்படி இல்லையென்றால் இந்த படத்தில் நடித்த 8 இளைஞர்களின் கேரியருமே கேள்விக்குறியாக மாறிவிடும். அதோடு இந்த டிரைலரே படத்தில் அப்படி என்ன தான் இருக்கிறது என்பதை பார்க்க இளைஞர்களை தூண்டி உள்ளது.