பட வாய்ப்புகளுக்காகவும், பப்ளிசிட்டிக்காகவும் எதையாவது செய்து பரபரப்பு ஏற்படுத்துவதையே சில சினிமா பிரபலங்கள் வாடிக்கையாக வைத்துள்ளனர். அதில் நடிகைகள் தான் துணிந்து பல விஷயங்களை செய்து சர்ச்சையை கிளப்புவார்கள். ஆனால் பிரபல நடிகர் ஒருவர் சில மாதங்களுக்கு முன்பு செய்த விஷயம் ஒட்டுமொத்த மீடியாவையும் அவர் பக்கம் திரும்பியது.
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருக்கும் விஷ்ணு விஷால் திடீரென ஒரு போட்டோ சூட் நடத்தி அனைவருக்கும் ஷாக் கொடுத்தார். அதாவது பாலிவுட் நடிகரான ரன்வீர் சிங் ஒரு பத்திரிக்கைக்காக ஆடை இல்லாமல் போஸ் கொடுத்து போட்டோ ஷூட் நடத்தி இருந்தார். அந்த போட்டோ மிகப்பெரிய அளவில் பரப்பரப்பை ஏற்படுத்தி இருந்தது.
அதைத்தொடர்ந்து சில நாட்களிலேயே நடிகர் விஷ்ணு விஷாலும் அதே போன்று ஒரு போட்டோ சூட் நடத்தி தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டிருந்தார். மேலும் இதுதான் இப்போதைய ட்ரெண்ட் எனவும் குறிப்பிட்டு இருந்தார். அந்த போட்டோ வெளியான சில நிமிடங்களிலேயே வைரலாகி பெரும் சர்ச்சையை கிளப்பியது.
மேலும் அவருக்கு எதிராகவும் சிலர் கடுமையாக விமர்சனம் செய்திருந்தனர். ஆனால் விஷ்ணு விஷால் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படவில்லை. தற்போது இப்படி ஒரு ஐடியா அவருக்கு எப்படி வந்தது என்று தெரியவந்துள்ளது. அதாவது சில காலமாகவே அவர் நடிப்பில் வெளிவரும் படங்கள் பெரிய அளவில் ரசிகர்களை கவரவில்லை.
அவருடைய கடந்த சில திரைப்படங்கள் விமர்சன ரீதியாக பாராட்டுகளை பெற்றாலும் வசூல் ரீதியாக சரிவை தான் சந்தித்தது. அது மட்டுமல்லாமல் பெரிய அளவில் பட வாய்ப்புகளும் அவருக்கு வரவில்லை. அதனால் தான் அவர் இப்படி ஒரு போட்டோ சூட் நடத்தி அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பி இருக்கிறார். இதற்கு அவருடைய மனைவியும் முழு சம்மதம் தெரிவித்து இருக்கிறார்.
மேலும் விஷ்ணு விஷாலின் இரண்டாம் மனைவி தான் இந்த போட்டோவை எடுத்திருக்கிறார். பப்ளிசிட்டிக்காக அவர் இப்படியெல்லாம் தீயாக வேலை செய்திருப்பது பலரையும் வாய்ப்பிளக்க செய்து இருக்கிறது. ஆனால் அதிலும் அவருக்கு ஒரு நல்லதே கிடைத்து இருக்கிறது. ஏனென்றால் தற்போது சூப்பர் ஸ்டார் மகளின் இயக்கத்தில் அவர் நடிக்க இருக்கிறார். அதைத் தொடர்ந்து இன்னும் சில வாய்ப்புகளும் அவருக்கு வந்து கொண்டிருக்கிறது.