மண்ட மேல இருந்த கொண்டையை மறந்த VJ அஞ்சனா.. அதுக்குன்னு இப்படியா அசிங்கப்படுத்துறது!

VJ Anjana: எத்தனையோ தொகுப்பாளினிகள் இருந்தாலும் வெகு சிலர் தான் ரசிகர்கள் மனதில் நிரந்தர இடம் பிடிக்கின்றனர். அப்படிப்பட்ட பிரபலங்களில் முக்கியமானவர்தான் விஜே அஞ்சனா. எப்போதுமே கலகலப்பாக நிகழ்ச்சியை கொண்டு செல்லும் இவர் தற்போது மேடையிலேயே அசிங்கப்பட்ட ஒரு சம்பவமும் நடந்துள்ளது.

சமீபத்தில் சித்தார்த் நடிப்பில் வெளிவந்த சித்தா ஒட்டு மொத்த ரசிகர்களையும் கவர்ந்து நல்ல விமர்சனங்களை பெற்றது. இதன் வெற்றி விழா சமீபத்தில் நடைபெற்றது. அதை தொகுத்து வழங்கிய அஞ்சனா மேடையில் விருந்தினர்களை கூட அழைக்க மறந்து படம் பற்றி வளவளவென பேசிக் கொண்டே இருந்திருக்கிறார்.

ஏற்கனவே பட குழுவினர் இரண்டு மணி நேரம் தாமதமாக வந்ததால் நொந்து போயிருந்த பத்திரிக்கையாளர்கள் அஞ்சனாவின் இந்த சொற்பொழிவை பார்த்து மயக்க நிலைக்கே சென்றிருக்கின்றனர். அதை தொடர்ந்து அவர்களின் பொறுமை எல்லாம் காற்றில் பறக்க போதும்மா கொஞ்சம் நிறுத்துறியா என்ற ரேஞ்சில் கைதட்டி அவர் வாயை அடைத்திருக்கின்றனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அஞ்சனா குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற கதையாக சமாளித்தபடி பட குழுவினரை பேசுவதற்கு அழைத்தார். அதை தொடர்ந்து விழாவும் ஒரு வழியாக முடிவு பெற்றிருக்கிறது. இருந்தாலும் மேடையில் நடந்ததை மறக்காத அஞ்சனா பத்திரிக்கையாளர்களிடம் இது குறித்து சண்டைக்கு பாய்ந்திருக்கிறார்.

ஒரு நல்ல விஷயத்தை பற்றி தானே நான் பேசிக் கொண்டிருந்தேன் எதற்காக இன்சல்ட் செய்கிற மாதிரி நடந்து கொண்டீர்கள் என கேட்டதற்கு பத்திரிக்கையாளர்கள் ஒரு வழியாக சமாளித்து அவரை கூல் செய்து இருக்கின்றனர். இருந்தாலும் அஞ்சனா மேடையில் போட்ட அறுவை புராணம் தான் மீடியாவை கலக்கிக் கொண்டிருக்கிறது.

பொதுவாக தொகுப்பாளினிகள் நறுக்கென்று நான்கு வார்த்தை பேசி விட்டு விருந்தினர்களை அழைப்பார்கள். ஆனால் எதற்கு வந்தோம் என்பதையே மறந்து விட்டு அஞ்சனா செய்த இந்த அட்ராசிட்டி இப்போது கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளாகி வருகிறது. இப்படி மண்ட மேல இருந்த கொண்டையை மறந்த கதையாக மாறி இருக்கிறது இவரின் நிலைமை.